Best Director Oscar : 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற Anora திரைப்பட இயக்குநர் Sean Baker
Sean Baker : சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது உட்பட அதிகபட்சமாக 5 விருதுகளை வென்றுள்ளார் அனோரா படத்தின் இயக்குநர் Sean Baker

2025 ஆஸ்கர் விருதுகள்
திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடந்து முடிந்தது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநருக்கான விருதை Anora படத்திற்காக Sean Baker வென்றுள்ளார்
Anora - Sean Baker
இந்த ஆஸ்கர் விருது விழாவில் அதிகபட்ச எண்ணிக்கையாக மொத்தம் 5 விருதுகளை ஷான் பேக்கர் இயக்கிய அனோரா படம் வென்றுள்ளது. வென்றுள்ளார். சிறந்த திரைக்கதை , சிறந்த படத்தொகுப்பு , சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகை , சிறந்த திரைப்படம் என மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கிறிடோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமர் படம் மொத்தம் 7 விருதுகளை வென்றது. இந்த ஆண்டு பெரும்பாலான பிரிவுகளில் அனோரா திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியது.
சிறந்த நடிகைக்கான விருதைத் தவிர்த்து சிறந்த திரைக்கதை , சிறந்த படத்தொகுப்பு , சிறந்த இயக்குநர் , சிறந்த திரைப்படம் என நான்கு விருதுகளையும் படத்தின் இயக்குநர் ஷான் பேக்கர் வென்றுள்ளார். மிக சிறிய பட்ஜெட்டில் சுயாதீன படமாக உருவான அனோரா திரைப்படம் பெரியளவில் வசூல் ஈட்டவில்லை. ஆனால் பல்வேறு விருது விழாக்களில் இந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. தற்போது திரைத்துறையின் உச்சபட்ச விருதான ஆஸ்கர் மேடையில் அதிகப்படியான விருதுகளை வென்றுள்ளது அனோரா.





















