மேலும் அறிய

Oscar 2025: ஆஸ்கார் விருதை தவற விட்ட பிரியங்கா சோப்ராவின் அனுஜா ஷார்ட் பிலிம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இதில் குறும்படத்திற்கான பிரிவில் பிரியங்கா சோப்ராவின் அனுஜா என்ற ஷார்ட் பிலிம் ஆஸ்கார் விருதை தவறவிட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான 97ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், சிறந்த அனிமேஷன் படம், சிறந்த துணை நடிகர் என்று பல பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் சிறந்த நேரடி ஆக்‌ஷன் குறும்படத்திற்கான பிரிவில் பிரியங்கா சோப்ராவின் அனுஜா என்ற குறும்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டுள்ளது.  

சிறந்த ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு அனுஜா, ஏ லியன், ஐ’ம் நாட் எ ரோபோ, தி லாஸ்ட் ரேஞ்சர் மற்றும் தி மேன் ஹூ குட் நாட் ரிமைன் சைலண்ட் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில், பிரியங்கா சோப்ராவின் அனுஜா என்ற குறும்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டுள்ளது. மேலும், ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கிய இந்தப் படத்தில் அனுஜா என்ற பெண் ரோலில் சஜ்தா பதான் நடித்திருந்தார். 

Oscar 2025: ஆஸ்கார் விருதை தவற விட்ட பிரியங்கா சோப்ராவின் அனுஜா ஷார்ட் பிலிம்!

பெண்களை மையப்படுத்திய இந்த குறும்படத்தில் அனன்யா ஷான்பாக், சுஷீல் பர்வானா, நாகேஷ் போஸ்லே, குல்ஷன் வாலியா, ஜூகல் கிஷோர், பங்கஜ் குப்தா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். பிரியங்கா சோப்ரா இந்த குறும்படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியான இந்த குறும்படம் பிப்ரவரி 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அனுஜா எப்படி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார் என்ற கருவை மையப்படுத்தி இந்த அனுஜா குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அனுஜாவிற்கு விருது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக I'm Not A Robot என்ற குறும்படம் சிறந்த ஆக்‌ஷன் ஷார்ட்பிலிம் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget