Agathiya Movie Review : ஜீவா நடித்துள்ள அகத்தியா எப்படி இருக்கு ? இதோ விமர்சனம்
Agathiya Movie Review : ஜீவா நடித்து பா விஜய் இயக்கியுள்ள அகத்தியா திரைப்படத்தின் முழு விமர்சனத்தையும் இங்கே பார்க்கலாம்

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படம் அகத்தியா . ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அன்மையில் இப்படம் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபேண்டஸி ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் அகத்தியா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
அகத்தியா
சினிமாவில் கலை இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறார் நாயகன் அகத்தியன் ( ஜீவா). தனது முதல் பட வாய்ப்பிற்காக பாண்டிச்சேரியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை தயார் செய்கிறார். படப்பிடிப்பின் போது ஒரு எ ஒரு பியானோ அவர்களிடம் வந்து சேர்கிறது. அந்த பியானோவை வாசித்ததும் அமானுஷ்ய நிகழ்வுகள் தொடங்குகின்றன. இதனால் படப்பிடிப்பு நிற்கிறது. அதே வீட்டை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி பணம் சம்பாதிக்க இடியா கொடுக்கிறார் நாயகி ராஷி கன்னா.
அந்த வீட்டில் கிடைக்கும் ஃபிலிம் ஒன்றின் மூலம் கதை 1940 க்கு நகர்கிறது. அதில் சித்த மருத்துவராக வருகிறார் அர்ஜூன். பாண்டிச்சேரி பிரெஞ்சு அதிகாரியின் மாற்றுத் திறனாளி தங்கையை குணப்படுத்துவதாக சவால் விடுகிறார் அர்ஜூன். இந்த கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் என்பதே அகத்தியா படத்தின் கதை.
அகத்தியா விமர்சனம்
அகத்தியா படத்தில் கலை இயக்குநர் சன்முகம் மற்றும் ஒளிப்பதிவு தீபக் குமார் இணைந்து படத்திற்கு செம லுக் கொடுத்திருக்கிறார்கல். செட் அமைக்கப்பட்ட விதமும் , அதை காட்சிபடுத்திய விதமும் ஃபேண்டஸி கதைக்கு உயிர்கொடுக்கின்றன.
ஹாரர் , சைன்ஸ் என இரண்டு விதமான அம்சங்கள் அகத்தியாக படத்தில் இருக்கின்றன. மேலும் அறிவியல் என்கிற பெயரில் படத்தில் பல இடங்களில் வாட்ஸ் அப் செய்திகளில் வரும் நிரூபனமற்ற தகவல்கள் படத்தில் சொல்லப்படுகின்றன. காமெடி , ஆக்ஷன் , த்ரில் , செண்டிமெண்ட் என ஒரே நேரத்தில் படம் பல விஷயங்களை கலவையாக கையாள்வதால் காட்சிகள் தனித்துவம் இல்லாமல் போகின்றன. படம் கையாளும் கதைக்களத்தை இயக்குநர் ரொம்ப ட்ரெண்டியாக சொல்ல நினைத்து சொதப்பி இருக்கிறார்.
ராதா ரவி , நிழல்கள் ரவி , சார்லீ , ரோகிணி . காமெடிக்கென ஷாரா , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , விடிவி கணேஷ் என பல்வேறு நடிகர்கள் இருந்தும் முழுமையாக பயண்படுத்தப் படவில்லை.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜீவா, அர்ஜூன் தங்கள் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்கள். ராஷி கண்ணாவிற்கு முக்கியத்துவம் இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் முன் வாசலில் வந்து பின் வாசல் வழியாக ஓடுகிறார்கள்.
யுவனின் பின்னணி இசை மற்றும் பாடல்கழ் படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் கிராஃபிக்ஸில் கவனம் செலுத்தியிருக்கலாம். முயற்சி புதிதாக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்துகளிலும் , சொல்லிய விதத்திலும் ரொம்ப அவுட் ஆஃப் டேட்டில் இருப்பதால் அகத்தியா படம் கொடுத்த ஹைப்பிற்கு நியாயம் சேர்க்காமல் போகிறது.





















