மேலும் அறிய

"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய தேவேந்திர ஃபட்னாவிஸ்!

கடந்த  2019ஆம் ஆண்டு, முதலமைச்சர் பதவியை இழந்த ஃபட்னாவிஸ், ஜெயலலிதா பாணியில் 5 ஆண்டுகளில் தனது கட்சியை வெற்றி பெற செய்திருக்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின்போது, முதலமைச்சர் பதவி தொடர்பான சண்டையில் தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் பறி கொடுக்க வேண்டியிருந்தது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு மீண்டும் முதலமைச்சாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 33 தொகுதிகளில் வெற்றியும் மேலும் 99 தொகுதிகளிலும் முன்னிலையிலும் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 15 தொகுதிகளில் வெற்றியும் மேலும் 40 தொகுதிகளில் முன்னிலையிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றியும் 23 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.

ஜெயலலிதா பாணியில் எடுத்த சபதம்:

இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. பாஜக கூட்டணிக்கு கடும் போட்டி அளிக்கும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் மட்டும் இன்றி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகளும் தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளது.

பாஜக கூட்டணியின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் என கூறப்படுகிறது. இவர் வேறு யாரும் அல்ல. தற்போது, துணை முதலமைச்சராக உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர்.

ஆனால், 2019ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின்போது, முதலமைச்சர் பதவி தொடர்பான சண்டையில் தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் பறி கொடுக்க வேண்டியிருந்தது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம், தேசிய தலைமையின் உத்தரவின் காரணமாக துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு மீண்டும் முதலமைச்சாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் தேதி நடந்த மோதலின்போது, அவையில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முதலமைச்சராகத்தான் மீண்டும் இந்த அவைக்குள் நுழைவேன் என்று கூறிவிட்டு சென்ற ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராக தனது சபதத்தை நிறைவேற்றினார். 

அதேபோல், கடந்த  2019ஆம் ஆண்டு, முதலமைச்சர் பதவியை இழந்த ஃபட்னாவிஸ், ஜெயலலிதா பாணியில் 5 ஆண்டுகளில் தனது கட்சியை வெற்றி பெற செய்திருக்கிறார். அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்? 

கடந்த 1970ஆம் ஆண்டு, ஜூலை 22ஆம் தேதி பிறந்த தேவேந்திர கங்காதர் ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 44ஆவது வயதில், சரத் பவாருக்குப் பிறகு மாநிலத்தின் இளைய முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். 

தனது கல்வி படிப்பை நாக்பூரில் உள்ள சங்கர் நகர் சௌக்கில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் முடித்தார். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டக் கல்வியைத் தொடர நாக்பூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1992 ஆம் ஆண்டு, பட்டம் பெற்ற இவர், பெர்லினில் உள்ள டி.எஸ்.இ.யில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் திட்ட மேலாண்மை டிப்ளோமாவும் பெற்றார்.

2006ஆம் ஆண்டு, ஃபட்னாவிஸ் அம்ருதா ரானடேவை திருமணம் செய்து கொண்டார். இவர் நாக்பூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் இணை துணைத் தலைவராகப் பணிபுரிகிறார். இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் திவிஜா ஃபட்னாவிஸ் என்ற பெண் குழந்தை உள்ளது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
Embed widget