மேலும் அறிய

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!

மும்பையில் உள்ள சயான் கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் கேப்டன் தமிழ் செல்வன்.

துபாய்க்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றப்பட்டு மும்பை விமான நிலையத்தில் இறக்கி விடபட்ட தமிழன், பின்னர் அதே மும்பையில் வாழ்க்கையை தொடங்கி ரயில் நிலையத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி, இன்று அதே மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் கேப்டன் தமிழ்செல்வன். அவருக்கு நிச்சயம் இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்:

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி என்னும் கிராமம் தான் தமிழ்செல்வனின் பூர்வீகம். இவரது தாய், தம்பி ஆகியோர் தற்போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் வசித்து வருகிறார்கள்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தமிழ் செல்வன் எப்படியாவது வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற கனவோடு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாய் செல்ல முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்போது துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ் செல்வனை மும்பைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி விமான நிலையத்தில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு வந்து ஏமாந்து போய் மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை.

யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்?

அதனால் மும்பையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு வேலை சாப்பிட கூட கையில் பணமில்லை, மும்பை ரயில் நிலையத்திலேயே தங்கிய தமிழ் செல்வன், கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். உதவும் மணம் கொண்ட தமிழ் செல்வன், தன்னுடைய தேவைகளை பூர்தி செய்து கொள்வதில் மட்டும், கவனம் செலுத்தாமல் தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பல மக்களுக்கு உதவத் தொடங்கினார்.

குறிப்பாக, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதி தாக்குதல் நிகழ்வு தமிழ் செல்வன் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது. தீவிரவாத தாக்குதலின் போது காயமடைந்து உயிருக்கு போராடிய 50க்கும் அதிகமான நபர்களை தன்னுடைய ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக, மருத்துவமனை நோக்கி மூச்சு இறைக்க சென்றார்.

பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் செல்வனை மக்கள் கையெடுத்து கும்பிட்டனர். இவரது சேவையை பாராட்டிய, மகாராஷ்டிர மாநில ஆளுநர் தமிழ் செல்வனுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதனால் அதுவரை சாதரண தமிழ் செல்வனாக அழைக்கப்பட்டு வந்தவர் அதன் பின் கேப்டன்' தமிழ்ச்செல்வனாக உருவெடுத்தார்.

மும்பை வாழ் தமிழ் மக்கள் இவரை பெயரை சொல்லி அழைப்பதை விட, கேப்டன் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், படிப்படியாக உயர்ந்த தமிழ் செல்வனின் கிராஃப் அவரை உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவராக மாற்றியது.

அதை தொடர்ந்து மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக பொறுப்பேற்ற தமிழ்செல்வன், அடுத்ததாக பாஜகவில் இணைந்தார். அங்கிருந்து எகிற தொடங்கியது தமிழ்ச்செல்வனின் பொலிட்டிக்கல் கிராஃப். 2014 சட்டசபை தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் சீட் கொடுத்தது பாஜக.

அதில் வெற்றி பெற்ற முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன தமிழ்செல்வன், மீண்டும் 2019, 2024 என  அடுத்தடுத்த தேர்தல்களில் வரிசையாக நின்று மூன்றாவது முறையாக தற்போது சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார்.

மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பாஜகவும், காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதின. பாஜக சார்பில் கேப்டன் தமிழ் செல்வனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கணேஷ் குமார் யாதவ் என்ற தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட இன்னோரு தமிழரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் யார் அடுத்த முதல்வர் என்று எழுந்த எதிர்பார்ப்பை காட்டிலும், இந்த இரு தமிழர்களில் யார் கோலிவாடா தொகுதியை கைப்பற்றப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு தமிழ் நாட்டில் நிலவியது.  
 
இந்த நிலையில் தான் சயான் - கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் கேப்டன் தமிழ் செல்வன். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் கேப்டன் தமிழ் செல்வனுக்கு இந்த முறை மகாராஷ்டிர கூட்டணி அரசில் நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget