மேலும் அறிய

Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகும் நிலையில், ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்கி மோர்ச்சா பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு இன்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

ஜார்க்கண்டில் கெத்து காட்டும் முக்தி மோர்ச்சா:

ஆனால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக காலை முதலே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. அங்கு 81 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் கூட்டணி கட்சியினரும் போட்டியிட்டனர்.

மத்தியில்  ஆளும் பா.ஜ.க.வினர் 68 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது. எஞ்சிய தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் களமிறங்கியது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியானதும் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், காலை முதலே பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க. வியூகம்:

தற்போதைய நிலவரப்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியினர் 50 தொகுதியில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க.  கூட்டணியினர் 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பெரும்பான்மைககு தேவையான தொகுதிகள் கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.க. மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

சம்பாய் சோரனை தங்கள் பக்கம் இழுத்ததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு பெரும் நெருக்கடி தர முடியும் என்ற பா.ஜ.க.வின் வியூகம் தவிடுபொடியானது. சம்பாய் சோரன் போட்டியிட்ட தொகுதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தோல்வி முகத்தில் ஹேமந்த் சோரன் மனைவி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தான் போட்டியிட்ட கான்டே தொகுதியில் பின்னடைவில் உள்ளார். அதேசமயம், ஹேமந்த் சோரன் பர்கைட் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சி கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் அந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை பிடிக்க இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரமும் இன்று மாலைக்குள் வெளியாகும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget