மனைவியை தகாத உறவுக்கு அழைத்த காவலர்... கோபத்தில் மூக்கு, காது, உதடுகளை அறுத்த கணவன்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மூக்கு, காது மற்றும் உதடுகளை துண்டித்த ஒரு நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மூக்கு, காது மற்றும் உதடுகளை துண்டித்த ஒரு நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை மிரட்டியதாகவும், அவருடன் தகாத உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஜாங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று முஹம்மது இப்திகார் என்ற முக்கிய குற்றவாளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கான்ஸ்டபிள் காசிம் ஹயாத்தின் மூக்கு, காதுகள் மற்றும் உதடுகளை வெட்டியுள்ளனர். தொடர்ந்து அந்த கான்ஸ்டபிள்ளை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆசிரியர் பணி நியமன ஊழலில் சிக்கிய அமைச்சர்; விரிவாக்கம் ஆகும் மம்தா பானர்ஜி அமைச்சரவை!
கான்ஸ்டபிள் காசிம் ஹயாத் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த இப்திகார், 12 கூட்டாளிகளுடன் சேர்ந்து, வீடு திரும்பும் வழியில் அவரைக் கடத்திச் சென்றுள்ளார். கடத்தைய அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது உடல் உறுப்புகளை கூர்மையான கத்தி முனையால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கான்ஸ்டபிள், ஜாங் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், கான்ஸ்டபிள் ஹயாத் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் (பிபிசி) பிரிவுகள் 354 (பெண்ணைத் தாக்குதல்), 384 (பணம் பறித்தல்) மற்றும் 292 (ஆபாசப் படங்கள்) ஆகியவற்றின் கீழ் இப்திகார் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
ஹயாத் தனது மகனைக் கொன்றுவிடுவதாக மிரட்டியபோது, தன்னுடன் தகாத உறவு வைத்துக் கொள்ளுமாறு ஹயாத் தனது மனைவியை வற்புறுத்தியதாக இப்திகார் கூறினார். தனது மனைவி ஹயாத்தை சந்தித்தபோது, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அந்தச் செயலை வீடியோவாக எடுத்து மிரட்டத் தொடங்கினார் என்றும் இப்திகார் தெரிவித்திருந்தார்.
இப்திகார் மற்றும் அவரது கூட்டாளிகளை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்