மேலும் அறிய

Sengottaiyan,Seeman Meets Nirmala | ”செங்கோட்டையன், சீமான் நிர்மலாவுடன் திடீர் சந்திப்பு”நடு இரவில் பேசியது என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை கிண்டி தனியார் ஓட்டலில் அடுத்தடுத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி அமைவதற்கு ஆதரவாக பல அதிமுக தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாரமனை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையுமோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வெற்றிக்கான ஆதரமாக அதன் கூட்டணியே கருதப்படுகிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை, திமுகவின் வலுவான கூட்டணி தொடர்கிறது. அதற்கு நிகரான கூட்டணி அமைத்தால் மட்டுமே, திமுகவை வீழ்த்த முடியும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

கடந்தமுறை செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததே தனக்கு தெரியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் மீண்டும் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்துள்ளார். கட்சி தலைமைக்கே தெரியாமல் நிகழும் அவரின் செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா உடனான சந்திப்பின் போது கூட்டணி அமைக்க எடப்பாடி சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. அதனை பாஜக தலைமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விளைவாகவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை கொண்டு, எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசை சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், அண்மைக்காலமாகவே பாஜக மீதான விமர்சனத்தை அவர் குறைத்துள்ளார். அதற்கு நடிகை தொடர்பாக அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நிர்மலா சீதாராமன் மற்றும் சீமான் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget