IPL 2025 GT vs SRH: தமிழர்களை நம்பி களமிறங்கும் குஜராத்! மரண அடி அடிக்குமா சன்ரைசர்ஸ்?
IPL 2025 GT vs SRH: குஜராத் அணிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் நடக்கும் போட்டியில் ஹைரதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

IPL 2025 GT vs SRH: ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே இன்று ஹைதராபாத் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன்கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஃபார்முக்கு திரும்புமா சன்ரைசர்ஸ்?
ஆர்சிபி அணியுடன் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இந்த போட்டியிலும் சேசிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் முதல் போட்டியில் 286 ரன்கள் விளாசி அனைவரையும் அதிர வைத்த சன்ரைசர்ஸ் கடந்த போட்டியில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மிக மோசமான நிலைக்குச் சென்றது.
இந்த நிலையில், மீண்டும் முதல் அணியாக பேட்டிங்கில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணி மீண்டும் தாங்கள் பேட்டிங்கில் வலுவான அணி என்பதை நிரூபிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் குஜராத் அணி தங்களது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பேட்டிங் மூலம் வெற்றியை வசப்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ப்ளேயிங் லெவன்:
சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷன்கிஷண், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா, கமிந்து மென்டிஸ், கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி.
குஜராத் அணியில் சாய் சுதர்சன், சுப்மன்கில், பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷீத்கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நான்கு தமிழர்கள்:
குஜராத் அணியைப் பொறுத்தவரை இன்று நான்கு தமிழர்கள் களமிறங்குகின்றனர். சுதர்சன், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் களமிறங்குகின்றனர். இவர்களின் சுதர்சன் தொடக்க வீரர், ஷாருக்கான் அதிரடி பினிஷர், கிஷோர் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டர் ஆவார்.
இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது 5வது போட்டியில் ஆடும் சன்ரைசர்ஸ் அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் மிகவும் நெருக்கடியை எதிர்கொள்ளும்.
பேட்டிங் படை ஆதிக்கமா?
சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியம். அனிகெத் வர்மா அதிரடி காட்ட வேண்டியதும் முக்கியம். அதேபோல, குஜராத் அணியில் சுதர்சன், கேப்டன் கில், பட்லர், ஷாருக்கான், திவேதியா அதிரடியாக ஆட வேண்டியதும் முக்கியம் ஆகும்.
இரு அணிகளிலும் முகமது ஷமி, கம்மின்ஸ், உனத்கட், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா, சிராஜ் என பந்துவீச்சும் பலமாக உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் பந்துவீச்சு முக்கிய பங்காற்றும் என்று கூறலாம்.




















