மேலும் அறிய

X.com Banned: லோகோவை மாற்றிய மஸ்க்.. டாட்டா காட்டிய இந்தோனேசியா அரசாங்கம்..!

ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் செய்தி அமைச்சகத்தால் X.com தடை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆபாச மற்றும் சூதாட்டத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் எலோன் மஸ்க்கின் நிறுவனத்தின் சமூக ஊடக தளமான X.com (முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) இந்தோனேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது மஸ்க் மற்றும் எக்ஸ்.காம் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி இந்தோனேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் செய்தி அமைச்சகத்தால் X.com தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்தின் டொமைன் பெயர் (X.Com) ஆபாசப் படங்கள் மற்றும் சூதாட்டம் போன்ற 'எதிர்மறை' உள்ளடக்கத்திற்கு எதிரான நாட்டின் கடுமையான சட்டங்களுக்கு இணங்கவில்லை என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

மஸ்க் செய்ய வேண்டியது என்ன?

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் உஸ்மான் கன்சோங், தளத்தின் தன்மையை தெளிவுபடுத்த X.Com X உடன் அரசாங்கம் தொடர்பு கொண்டுள்ளது என கான்சோங் செவ்வாயன்று- அதாவது ஜூலை 25ஆம் தேதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நாங்கள் ட்விட்டரின் பிரதிநிதிகளுடன் பேசினோம். ட்விட்டர் சார்பாக X.com பயன்படுத்தப்படுகிறது என்று முதலில் கடிதம் அனுப்ப வேண்டும். இதன் பின்னர் X.comக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த நடவடிக்கையால் இந்தோனேசியர்கள் ட்விட்டரை தற்போதைக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

 24 மில்லியன் ட்விட்டர் பயனர்கள் 

இந்தோனேசியா நாட்டின் 270 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 24 மில்லியன் (அதாவது சுமார் 2 கோடியே 40 லட்சம்) பயனர்கள் இந்தோனேசியாவில் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, தளத்தின் மறுபெயரிடுதலின் ஒரு பகுதியாக ட்விட்டர் கருப்பு பின்னணியில் (Background) வெள்ளை எக்ஸ் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அதன் பறவை சின்னத்தை இனிமேல் பயன்படுத்தப்படாது என்றும் மஸ்க் அறிவித்தார். மஸ்க் அதை மறுபெயரிடுதல் என்று கூறுகிறார். இது பயனர்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. இருப்பினும், தளத்தை 'எல்லாவற்றிற்கும் ஒரு பயன்பாடாக மாற்றுவதற்கான முதல் படி இது என்று மஸ்க் கூறியுள்ளார். இந்த செயலி மூலம் பணம் செலுத்துதல் மற்றும் வங்கி சேவைகள் போன்ற சேவைகளும் தொடங்கப்படும் என்று மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் இணையதளங்களைத் தடுப்பது ஒன்றும் புதிதல்ல.பிரபலமான இணையதளங்களைத் தடுப்பது அல்லது தடுக்கப் போவதாக அச்சுறுத்துவது போன்ற விஷயங்களில்  உலக நாடுகளில் இந்தோனேஷியாதான் முன்னிலை வகிக்கிறது. இந்தோனேசியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள நாடு. 2022 ஆம் ஆண்டில், நெட்ஃபிக்ஸ், கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பிரபலமான தளங்களை, தங்கள் தளங்களில் தோன்றும் உள்ளடக்கத்தின் விவரங்களை அமைச்சகத்திற்கு வழங்காவிட்டால், அவற்றைத் தடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து தளங்களும் காலக்கெடுவிற்கு முன் பதிவு செய்வதன் மூலம் எச்சரிக்கப்பட்ட தடையைத் தவிர்க்க முடிந்தது.

Netflix நீண்ட காலமாக தடைசெய்யப்படப்பட்டிருந்தது

Netflix ஆனது இந்தோனேசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telekomunikasi இந்தோனேசியாவால் 2016 இல் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆபாசப் படங்கள் உட்பட 'தகாத உள்ளடக்கம்' பற்றிய அச்சம் காரணமாக தடை செய்யப்பட்டது. இந்த தடை 2020 ஆம் ஆண்டில் பாதிவரை தொடர்ந்தது. பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான TikTok 2018 இல் அதிகாரிகளால் சில காலங்களுக்கு தடை செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget