கொலையில் முடிந்த காதல்.. எரித்துக்கொன்ற கொடூரன்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்
Crime: கடந்த 23 ஆம் தேதி காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயப்புரம் அருகே பேச மறுத்த சிறுமியை வாலிபர் மண்ணெண்ணெய் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்
17 வயது சிறுமி:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயப்புரத்தை அடுத்த பரமக்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது, ஆனால் காதல் குறித்து சிறுமியின் வீட்டுக்கு தெரிய வந்தவுடன் சிறுமி வீட்டார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
தனியாக இருந்த சிறுமி:
இந்த நிலையில் சிறுமி சந்தோஷிடம் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் எனக்கூறிப் பிரிந்துவிட்ட நிலையில், வாலிபர் சந்தோஷ் சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது, இதனால் வாலிபர் சந்தோஷ்சால் மகளுக்கு பிரச்னை வரும் என்று நினைத்த சிறுமியின் பெற்றோர்கள். சிறுமியை எட்டயபுரத்தில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பாட்டி வீட்டில் இருந்த சிறுமி கடந்த 23ஆம் தேதி வீட்டின் அருகே பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டது, இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பேச மறுத்ததால் தீ வைப்பு:
சிறுமி அளித்த வாக்குமூலத்தில்படி முன்னாள் காதலன் சந்தோஷ் தன்னிடம் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். இதனை சிறுமி வர மறுத்தநிலையில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா என்பவரும் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தன் மீது தீ வைத்ததாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். சிறுமின் அளித்த் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
சிறுமி உயிரிழப்பு:
இந்த நிலையில் 65 சதவீகித தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னிடம்பேச மறுத்த சிறுமியை வாலிபர்கள் இருவர் மண்ணெண்ணெய்யை வைத்து தீ வைத்து எரித்த சம்பவத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.





















