Angelina Jolie : நேரடி களத்தில் ஏஞ்சலினா ஜோலி! ரஷ்ய உக்ரைன் போருக்கு மத்தியில் ஏமன் மக்களுக்காக எழும் குரல்!
20 மில்லியனுக்கும் அதிகமான ஏமன் மக்கள் உலக மக்களின் உதவியை நம்பி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர்களுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் ஏஞ்சலினா ஜோலி, மேலும் சமீபத்தில் அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். ஏமனின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்கு காட்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது பதிவில் "இது உலகின் மிக மோசமான பிரச்சனைகளில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையுடன் (UNHCR) உதவிகளை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில், ஏஞ்சலினா ஜோலி ஏமனின் நிலைமையை வெளியுலகின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.
View this post on Instagram
அவர் பதிவில், "நான் ஏமனில் தரையிறங்கினேன், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் அகதிகளை சந்திக்கவும், ஏமன் மக்களுக்கு எனது ஆதரவைக் வழங்கவும். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், நான் உங்களுக்காக இங்கேயேதான் இருக்கிறேன்." என்று அவரது பதிவில் எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மோதல் நடைபெறும் நிலையில், ஏமனின் நிலைமைகளில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வந்துவிடவில்லை என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். அதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஏமன் பக்கம் திரும்பியுள்ளார், அது மட்டுமின்றி அவர்களுக்காக உதவுவதற்கு தான் இருப்பதாக முன்னிலையில் நிற்கிறார். ஏமனின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஏஞ்சலினா ஜோலி, இது உலகின் மிக மோசமான கொடுமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
மேலும், 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பொதுமக்கள் கொல்லப்படவோ, காயப்படுத்தவோ படுகிறார்கள் என்றும், 20 மில்லியனுக்கும் அதிகமான ஏமன் மக்கள் உலக மக்களின் உதவியை நம்பி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர்களுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், ஏஞ்சலினாவும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக தனது குரலை கொடுத்திருந்தார். ஏஞ்சலினா ஜோலி உலகெங்கிலும் உள்ள அகதிகள் பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வை வழங்க தனது சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இவர் உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவில் உள்ள அகதிகள் தொடர்பான தனது முந்தைய பதிவில், "அனைத்து அகதிகளும், இடம்பெயர்ந்த மக்களும், சமமான சிகிச்சை மற்றும் உரிமைகளுக்கு தகுதியானவர்கள்" என்று எழுதி இருந்தார்.