மேலும் அறிய

Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?

Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா, தை முதல் நாளா என்பது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நீடித்து கொண்டு வரும் நிலையில், இதை அறிவியல் ரீதியாக இதை அணுகுவோம்

Tamil New Year 2025: தை மாதம் மற்றும் சித்திரை மாதம் வந்தாலே, மிகப் பெரிய விவாத பொருளாக மாறுவது தமிழ் புத்தாண்டு எப்போது என்பதுதான். சிலர் தை முதல் தினம்தான் புத்தாண்டு என கூறுவர், சிலர் சித்திரை முதல் தினம்தான் புத்தாண்டு என கூறுவர். இதில், அரசியலும் புகுந்து கட்சி ரீதியாகவும் புத்தாண்டு என்கிற அளவுக்குச் சென்றுவிட்டது. சரி, தமிழ் புத்தாண்டு குறித்த தகவலை அறிவியல் ரீதியாக பார்ப்போம். 

தமிழ் புத்தாண்டு சான்றுகள்:

தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று, அதற்கான சான்றுகளை, இந்த கருத்துகளின் ஆதரவாளர்கள் வைக்கின்றனர். அதற்காக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தை மாதத்தை முன்னிலைப்படுத்தி பாடல்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கின்றனர். இதுமட்டுமன்றி, சூரியனுக்கு நன்றி சொல்லும் உழவர் திருநாளும், தை மாதத்தில் வருவதும், தை மாதம்தான் தமிழ் புத்தாண்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, தை மாதத்தை ஆதரிப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. 

Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?

1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில், திரு.வி.க, சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தம், நாவலர் நா மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்திரம் பாரதியார், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஒன்றிணைந்து தை 15 ஆம் தேதிதான் தமிழ் புத்தாண்டு எனவும், கி.மு 31 ஐ திருவள்ளுவர் ஆண்டாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்து, அரசிதழிலும் வெளியிட்டது.

ஆனால், கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்ததாவது,”  மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாக தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப்பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், சித்திரை மாதம்தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கான நெடுநல்வாடை உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளையும் பலர் முன்னெடுத்து வைப்பதையும் அறிய முடிகிறது. 

Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?

தமிழர்கள் நாட்காட்டி:

இந்நிலையில், தை மாதமா இல்லை சித்திரை மாதமா என்ற அரசியல் காரணங்களை தாண்டி, அறிவியல் காரணங்கள் இருக்கின்றனவா என்பதை பார்க்கலாம். தமிழர்கள் பயன்படுத்திய நாட்காட்டியானது, சூரியன் மற்றும் நிலவு அடிப்படையாக கொண்டது இல்லை; நட்சத்திரங்களின் தொகுதிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார்கள். இந்த முறை சைடிரியல் காலண்டர் என அழைக்கப்படுகிறது. வானில் தெரியக்கூடிய நட்சத்திர தொகுதிகளை 12 ஆக பிரித்தார்கள். அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப கடகம், ரிஷபம் என 12 ராசி பெயர்களை வைத்தார்கள். இதுதான் 12 மாதங்களாகவும் மாறியது. வானில், எந்த நட்சத்திர தொகுதி வடிவம் தெரிகிறதோ, அந்த மாதம் இருக்கிறது என எடுத்துக் கொண்டார்கள்.

Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?

தமிழர் நாட்காட்டியின் என்ன பிரச்னை?:

ஆனால், நட்சத்திரங்களின் தொகுதிகளின் அடிப்படையிலான நாட்காட்டியில் பிரச்னை இருக்கிறது என கூறுகிறார், அறிவியல் ரீதியாக, யூடியூப் வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்து வரும் மிஸ்டர் ஜிகே . சூரியன் அடிப்படையிலான நாட்காட்டிதான் பருவ நிலைகளை சரியாக பொருத்தம் செய்கிறது. நிலவு அடிப்படையிலான நாட்காட்டியில் ஆண்டுக்கு 355 நாட்கள்தான், வழக்கத்தைவிட 11 நாட்கள் குறைவாக இருக்கிறது. அதனால்தான் அடுத்த வருடம் ரம்ஜான் 11 நாட்கள் இடைவெளியில் வரும்.

நட்சத்திர தொகுதிகளை நாட்காட்டியில் என்ன பிரச்னை என்றால், சூரிய நாட்காட்டியைவிட 20 நிமிடம் வித்தியாசம்தான். 20 நிமிடம்தானே என தோன்றலாம், ஆனால் பல மாறுதல்களை ஏற்படுத்தும். 20 நிமிடம் வித்தியாசத்திற்கு காரணம், பூமி சாய்வாக சுற்றுவதுதான். அப்பொழுது, பூமி சாய்வாக சுற்றுவது கண்டறியப்படவில்லை. அதை கண்டறிந்திருந்தால் , அப்பொழுதே திருத்தி இருக்க கூடும். அந்த காலத்தில், இப்பொழுது இருப்பதை போன்று தொழில்நுட்பம் இல்லை, கண்டறிவது மிகவும் சிரமமான காரியம். நட்சத்திரம் தொகுதி அடிப்படையிலான காலண்டரில் ஆண்டுக்கு 365.256 நாட்களும், சூரியன் அடிப்படையில் 365.242 நாட்களும் இருக்கின்றன. 

மார்ச் 20 ஆம் தேதி புத்தாண்டு?

இந்நிலையில், 20 நிமிடம் வித்தியாசமானது 25 நாட்கள் தற்போது அதிகரித்திருக்கிறது. இந்நிலையி அறிவியல் முறைப்படி தற்போதைய தொழில்நுட்பத்தோடு பார்த்தால், அந்த முதல் நட்சத்திர தொகுதியான மேஷம் ( சித்திரை ) மார்ச் 20 ஆம் தேதியே தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அதாவது, தற்போது ஏப்ரல் 14 லிருந்து 25 நாட்கள் பின்சென்றால் மார்ச் 20 -21 வரும். இந்நிலையில், மார்ச் 20 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினால், தமிழர்கள் ஆரம்ப காலத்தில் முறைப்படி கொண்டாடிய வழியில் இருக்கும். மேலும் அறிவியல் முறைப்படி மார்ச் 20 -21 ஆம் நாள் சமமான பகல்-இரவு உள்ள நாளாக இருப்பதால், ஒரு அர்த்தமுள்ள நாளாகவும் இருக்கும். 

இது, புதிய கருத்து இல்லை, இந்தியா சுதந்திரம் அடைந்தபின்,1950 ஆண்டு, பிரதமர் நேருவிடம் பரிந்துரை வைக்கப்படுகிறது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல நாட்காட்டிகள் ( தோராயமாக 30 ) இருக்கிறது. இந்தியாவுக்கென்று உருவாக்க வேண்டும் என கூற, நேருவும் ஒப்புதல் தெரிவிக்கிறார். இதையடுத்து, இந்தியாவின் நேர அமைப்பை IST கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் CSIR அமைப்பிடம், இதன் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஆராய்ச்சி மேற்கொண்டு, மார்ச் 21 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறது. இது, அப்போது அகில இந்திய வானொலியிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 

அறிவியலில் புத்தாண்டு இல்லை:

தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்று அரசியல் ரீதியாகவும், அவரது விருப்ப ரீதியாகவும் பல காரணங்கள் இருந்தாலும், அறிவியல் முறைப்படி செல்வதே சிறந்தது. இன்னும் சொல்லப்போனால், அறிவியல்பூர்வமாக புத்தாண்டே இல்லை.  பூமிக்கு ஏது மையப்புள்ளி, ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதுதான், தொடக்கப்புள்ளி , இதுதான் முடிவுப்புள்ளி என்பதே இல்லை. நுணுக்கமாக பார்த்தால் புத்தாண்டை அறிவியலானது, ஏற்கவில்லை. புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பழையதில் இருந்து விடுபட்டு புதிதாக ஒன்றினுள் போகிறோம் என்ற புத்துணர்வு தரும், இது நம்மை பழைய துன்பங்களிலிருந்து விடுபட்டு, புதிய பாதையில் செல்கிறோம் என்ற உணர்வை கொடுக்கும் என்ற நம்பிக்கையை கொடுப்பதாக பார்க்கப்படுகிறது என அறிவியல் தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும் மிஸ்டர். ஜி.கே தெரிவிக்கிறார். 

நன்றி MR.GK

Also Read: ” விண்வெளியில் இருந்து இந்திய மீனவர்களை பார்த்தால் இதுதான் தோன்றும்”- சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகிறார்!

Also Read: சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget