IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிராக 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடந்த போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான்:
இதையடுத்து ஜெய்ஸ்வால் - சாம்சன் ஆட்டத்தை தொடங்கினர். புவனேஷ்வர், யஷ் தயாள் தங்களது வேகத்தில் பவர்ப்ளேவில் நெருக்கடி அளித்தனர். இந்த நிலையில், அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் சாம்சன் குருணல் பாண்ட்யா சுழலில் சிக்கி விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அவர் 19 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ரியான் பராக் அவருக்கு ஒத்துழைப்பு தந்து அதிரடி காட்டினார். இதனால், நிதானமாக சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் ரன்கள் சற்று ஏறத்தொடங்கியது. யஷ் தயாளர் அவர் அளித்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
ஜெய்ஸ்வால் அபாரம்:
ஆனால், சில நிமிடங்களில் ரியான் பராக்கை தனது பந்துவீச்சிலே யஷ் தயாள் அவுட்டாக்கினார். அவர் 22 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அவர் ராஜஸ்தான் அணிக்காக அதிரடி காட்ட முயற்சித்த நிலையில், 47 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தில் அவுட்டானார்.
174 ரன்கள் டார்கெட்:
பின்னர்,ஜோடி சேர்ந்த துருவ் ஜோரல் - ஹெட்மயர் ஜோடி ராஜஸ்தான் அணிக்காக கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதனால், துருவ் ஜோரல் அதிரடி காட்டினார். கடைசியில் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 173 ரன்களை எடுத்தது. இதையடுத்து, ஆர்சிபி அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குருணல் பாண்ட்யா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர், யஷ் தயாள், ஹேசில்வுட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். துருவ் ஜோரல் அவுட்டாகாமல் 23 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.




















