திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் செத்து கிடந்த 2000 மீன்கள் - அதிர்ச்சியடைந்த விவசாயி
ஏரியில் செத்து கிடந்த இரண்டாயிரம் மீன்கள்...அதிர்ச்சியடைந்த விவசாயி
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் ஏரியில் இரண்டாயிரம் மீன்கள் செத்து கிடந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள மழவராயநல்லூர் ஏரியில் நாராயணசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் மழவராயனூர் ஏரியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அப்பகுதியினர் அழைத்து சென்றபோது ஏரியில் விடப்பட்டிருந்த இரண்டாயிரம் மீன்கள் செத்து மிதந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து மீன்கள் செத்து கிடப்பதால் அந்த நீரை கால்நடைகள் பருகினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கால்நடைகளை ஏரியில் விடாமல் அருகிலுள்ள திருவெண்னைய் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் ஏரியில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுடன் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். ஏரியில் மீன்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
Villupuram: பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!
செம்மண் குவாரி வழக்கு: நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி; 29ம் தேதி ஒத்திவைத்த நீதிபதி
வாடிக்கையாளரிடம் முன்பணம் பெற்று ரூ. 27 லட்சம் மோசடி; விழுப்புரத்தில் கார் நிறுவன மேலாளர் கைது