போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27 ஜூலை 2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பேருந்துகளுக்காக ஓட்டுநர் மற்றும் உடன் நடத்துநர் பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டுவருகின்றன. அரசு வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27 ஜூலை 2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி கடந்தவுடன் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்பதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
-
குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
-
ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணிபுரிவதற்கான உரிய அனுமதிப் படிவங்களும், தகுதிப் பத்திரங்களும் விண்ணப்பிக்கும் நேரத்தில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.arasubus.onlinereg.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு
இத்துடன் தொடர்புடைய மேலும் விரிவான தகவல்களையும் அறிவிப்புகளையும் www.arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
முக்கிய அறிவுறுத்தல்கள்
-
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
-
விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை தயார் வைத்திருக்க வேண்டும்.
-
தேர்வு செய்யப்பட்ட நபர்கள் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.
ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு!#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #SETC | #TNSTC@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews |… pic.twitter.com/Ta00DvdC0i
— ArasuBus (@arasubus) July 17, 2025
ஆரம்ப கால பணியிடம்
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஆரம்பகட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் தற்காலிமாக பணியில் அமர்த்தப்பட்டு பின்னர் பணி நிரந்தரம் நியமிக்கப்படும்.
தமிழக அரசுப் பேருந்துகளில் வேலை செய்யும் ஆசையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






















