மேலும் அறிய

செம்மண் குவாரி வழக்கு: நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி; 29ம் தேதி ஒத்திவைத்த நீதிபதி

விழுப்புரம் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர் ஆன நிலையில் 29ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு:- 

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் கணிமவளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மூத்த மகனான கெளதமசிகாமணி மற்றும் உறவினர்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறையில் செம்மண் குவாரி குத்தகைக்கு எடுத்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து பூத்துறையில் செம்மண் குவாரி எடுத்து நடத்திய அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அரசால் அனுமதிக்கப்பட்ட 3 அடி ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுப்பதற்கு பதிலாக 150 அடி முதல் 200 அடி வரையிலான ஆழத்திற்கு செம்மண்ணை வெட்டி எடுத்தனர்.

இதன்மூலம் அரசால் அனுமதி வழங்கப்பட்ட அளவைக் காட்டிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண்ணை வெட்டி எடுத்து முறைகேடாக விற்பனை செய்து அரசிற்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 2012ஆம் ஆண்டு வானூர் தாசில்தாராக பணியில் இருந்த குமரபாலன் என்பவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதனைத்தொடர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செம்மண் குவாரி நடத்த தனது மகனுக்கு அனுமதி வழங்கிய திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் செம்மண் குவாரி நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடியின் மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியுமான கவுதமசிகாமணி, கவுதமசிகாமணியின் மைத்துனர் ராஜமகேந்திரன், பொன்முடியின் பினாமிகளான கோத குமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுக அமைச்சர் பொன்முடி, சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், போபிநாத் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். மேலும் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 2 பேர் ஆஜராகவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் விஜியகுமாரன் சாட்சியம் அளித்தார். மேலும் வழக்கு விசாரணை 29ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Test Squad: டெஸ்ட் கேப்டனாக கில் நியமனம், இங்கி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, இளைஞர்களை அள்ளிய பிசிசிஐ
India Test Squad: டெஸ்ட் கேப்டனாக கில் நியமனம், இங்கி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, இளைஞர்களை அள்ளிய பிசிசிஐ
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
"நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன்" ஓடோடி வந்து உதவிய மனிதர்... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்Jayam Ravi vs Aarti |‘’ஆர்த்தி, ரவி கம்முனு இருங்க’’கறார் காட்டிய நீதிமன்றம் கப்சிப்பான CELEBRITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Test Squad: டெஸ்ட் கேப்டனாக கில் நியமனம், இங்கி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, இளைஞர்களை அள்ளிய பிசிசிஐ
India Test Squad: டெஸ்ட் கேப்டனாக கில் நியமனம், இங்கி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு, இளைஞர்களை அள்ளிய பிசிசிஐ
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
"நல்லா படி கண்ணு நான் இருக்கிறேன்" ஓடோடி வந்து உதவிய மனிதர்... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
Suzuki Access 125: மைலேஜின் ராஜாவா சுசுகி அக்சஸ் 125! ஒரு லிட்டருக்கு இத்தனை கி.மீ தருமா?
Suzuki Access 125: மைலேஜின் ராஜாவா சுசுகி அக்சஸ் 125! ஒரு லிட்டருக்கு இத்தனை கி.மீ தருமா?
Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்
Hybrid Cars: 1,256 கிமீ மைலேஜ், மிரட்டும் ஹைப்ரிட் கார்கள் - சொகுசும் இருக்கு, செலவும் மிச்சம் - டாப் 5 மாடல்கள்
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?
India Squad Vs Eng Series: இங்கிலாந்து தொடர் - இந்திய அணி இன்று அறிவிப்பு, வெற்றிடத்தை நிரப்புவது யார்? பேட்டிங் ஆர்டர்
India Squad Vs Eng Series: இங்கிலாந்து தொடர் - இந்திய அணி இன்று அறிவிப்பு, வெற்றிடத்தை நிரப்புவது யார்? பேட்டிங் ஆர்டர்
Embed widget