Villupuram: பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!
விழுப்புரத்தில் பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட் இருந்தால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
விழுப்புரத்தில் பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேக்கில் கிடந்த பல்செட்:
விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் முபாரக்,55; காங்கிரஸ் பிரமுகர். இவர், தனது நண்பர்களுடன், கிழக்கு பாண்டிரோடில் உள்ள ஒரு பேக்கரி–டீ கடைக்கு சென்றார். அப்போது, டீ சாப்பிட்டதுடன், கேக் வாங்கியும் சாப்பிட்டுள்ளனர். அந்த கேக்கில் பல்செட் ஒன்று, இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்கள், அந்த பேக்கரி கடை உரிமையாளரிடம் காண்பித்து புகார் அளித்தனர்.
அந்த கேக் தயாரிப்பு மையத்துக்கும் அவர்கள் புகார் அளித்து விசாரித்தனர். மேலும், இது குறித்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்