மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்
மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது: 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையானது ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சலையானது ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெல்ல பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால் புதுப்பேட்டை அகரம் மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களில் இருக்கும் மக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு வழியாக 25 கிலோமீட்டர் சுற்றி மரக்காணம் வருகின்றனர் ஓங்கூர் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரானது மரக்காணத்தில் உள்ள கிராமத்தின் வழியாகச் சென்று பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலந்துவிடும். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஓடையில் தூர்வாரப்படாமல் இருந்ததால் நீரானது விளை நிலங்களுக்குள் புகுந்து 50 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது.
மேலும் காணிமேடு அடுத்துள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்ந்து மழை காலங்களில் நடைபெறுவது வழக்கம் இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது 50 ஏக்கர் நெல் பயிர் சாகுபடி முற்றிலும் சேதமானது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரு சக்கர வாகனம் ஓட்டி சென்றவர் கவிழ்ந்து விழுந்தார், இதனைத் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அந்த வழினை தற்காலிகமாக மூடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் மழை நிலவரம்
விழுப்புரம் : 32 மி.மீ
விக்கிரவாண்டி : 22.50 மி.மீ
வானூர் : 39 மி.மீ
திண்டிவனம் : 23 மி.மீ
மரக்காணம் : 38 மி.மீ
செஞ்சி : 26 மி.மீ
மேல்மலையனூர் : 7 மி.மீ
திருக்கோயிலூர் : 19மி.மீ
திருவெண்ணைநல்லூர் : 13 மி.மீ
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், சென்னை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று (15.11.2023) காலை தொடங்கிய நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடகிழக்கு திசையில் திரும்பி நவம்பர்-17 ம் தேதி ஒடிடா கடற்கரையில்