Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தலில் வென்றால், வாடகை வீட்டுதாரர்களுக்கும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் என கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அந்த கட்சிகள் அனைத்துமே பல்வேறு அதிரடியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம், குடிநீர்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், தான் செல்லும் இடங்களில் எல்லாம், வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோரை சந்திப்பதாக தெரிவித்தார். அவர்கள், நல்ல பள்ளி, மருத்துவமனைகளால் பயனடைவதாகவும், ஆனால், அரசின் இலவச மின்சாரம், குடிநீர் திட்டங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் வாடகை வீடுகளில் வசிப்போரில் பெரும்பாலானோர் பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், அரசின் மானியங்களை பெற முடியாமல் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். அதனால், டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம் எனவும் வாக்குறுதி அளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

