Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
ஞாயிற்றுக்கிழமை(19.01.25) இரவு மண்டபத்தில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை இயக்குகிறது தெற்கு ரயில்வே.

பொங்கல் விடுமுறையில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பிவர வசதியாக, மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை, ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ரயில் ஒன்றை இயக்குகிறது தெற்கு ரயில்வே. அதன் விவரங்கள் இதோ...
ஞாயிறு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, 06048 என்ற எண் கொண்ட சிறப்பு ரயிலானது, ஞாயிறு இரவு 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து புறப்படுகிறது. அந்த ரயில், மறுநாள், அதாவது திங்கட்கிழமை(20.01.25) காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில், 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
எந்ததெந்த ஊர்கள் வழியாக சிறப்பு ரயில் பயணிக்கும்.?
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

