விழுப்புரம் அருகே சோழர் கால தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் சோழர் கால தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டுபிடிப்பு. இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி மூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் புதர்கள் மண்டியிருக்கும் திட்டு போன்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காணப்படுகிறது. வலது காலை தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் அழகே உருவாக வீராசனத்தில் அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. நான்கு கரங்களுடனும் தலை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கிறார். இவரது காதுகள், கழுத்து, கை மற்றும் கால்களை அணிகலன்கள் அணி செய்கின்றன. வலது கால் முயலகன் மீது அழுத்திய நிலையில் காணப்படுகிறது.
இந்த சிற்பத்தின் காலம் கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டு ஆகும். தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில் ஏற்கனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. ஆவுடையார் உள்ளிட்ட தடயங்கள் இப்போதும் இங்கு காணப்படுகின்றன. சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும். இப்பகுதியில் புதைந்துள்ள வரலாற்று தடயங்களை வெளியே கொண்டு வருவதற்கு கிராம மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்றார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவிலான வரலாற்று சிற்பம்,சுவடுகள் ஆகியவை கண்டிபிடிக்கபட்டு வருகின்றன, இதனை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்