TN Alcohol Poisoning: விஷ சாராய உயிரிழப்பு விவகாரம்: சிபிசிஐடியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
விஷ சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த வழக்கின் ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி சுனில் விழுப்புரம் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
விழுப்புரம்: எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த வழக்கில் ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி சுனில் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி கோமதியிடம் இன்று ஒப்படைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ விசாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சாராய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
சாராய வழக்கினை சி.பி.சி.ஐ.டி...டி ஐ ஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரனை அதிகாரியாக ஏ டி எஸ் பி கோமதியும் செங்கல்பட்டு விசாரானை அதிகாரியாக மகேஸ்வரி நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான வழக்கு தொடர்பான ஆவணங்களை கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்களை சிபிசிஐடி, ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சிபிசி ஐ டி போலீசார் விஷ சாராய வழக்கு தொடர்பான ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் பெற்றுகொண்டதாகவும் வழக்கு விசாரனையை தொடங்க உள்ளதாக மனு தாக்கல் செய்துள்ளனர். விஷ சாராயம் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் சிபிசிஐடி காவல்துறையினர் அதனை தொடர்ந்து தங்களின் முழு விசாரணையை இன்று தொடங்க உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்