மேலும் அறிய

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இசிஜி எடுத்த சலவை தொழிலாளி - மக்கள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இசிஜி எடுத்த சலவை பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதய பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளைக் கொண்ட நபர்களுக்கு மருத்துவமனையில் இசிஜி (எலக்ட்ரோ கார்டியோ கிராம்) சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் தொழில்நுட்ப (டெக்னிஷியன்) தனியாக நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களால் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, மருத்துவமனையின் சலவைப் பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர் கண்ணியம்மாள் என்பவர் இசிஜி எடுக்கும் காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து வீடியோ எடுக்கும் நபர், அந்தப் பெண் ஊழியரிடம், நீங்கள்தான் இசிஜி எடுப்பீர்களா எனக் கேட்பதற்கு அவர், மருத்துவர் இல்லை என்றால் நான் தான் இசிஜி எடுப்பேன். டெக்னிஷியன் கூறினாலும் எடுப்பேன் எனக் கூறுகிறார். இந்த வீடியோ பல்வேறு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கூறியது..

வீடியோ விவரம் தொடர்பாகவும், சலவைத் தொழிலாளி இசிஜி எடுத்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இதில், தவறிழைத்தது தெரியவந்தால், அந்த ஊழியர் மற்றும் அவரை இசிஜி எடுக்க கூறியவர் மீதும் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இசிஜி எடுத்த சலவை தொழிலாளி - மக்கள் அதிர்ச்சி

திருச்சி பொதுமக்களின் கருத்துகள்..

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய சாதாரண பொதுமக்கள் தான் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சில சமயம் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கக்கூடிய சிகிச்சையை விட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஏழை, எளிய , நடுத்தர மக்கள் நோய்களுக்கு உயர்தரமான சிகிச்சியை பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மேலும் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு இயங்கப்பட்டு வருகிறது. 

ஆகையால் அரசு மருத்துவமனைகளில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. காரணம் மாறி வரும் சூழ்நிலைகளில் பல்வேறு நோய் தொற்றுகளால் பொதுமக்கள் பாதித்து வருகிறார்கள். 

உடனடியாக சென்று தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், அரசு மருத்துவமனைகளில் அளிக்கக்கூடிய சிகிச்சை அனைத்தும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால் தினந்தோறும் நோய்களால் பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர். 

ஆனால் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் குறைவாக உள்ளனர். அதற்காக தமிழ்நாடு அரசு காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளி பெண் ஒருவர் இசிஜி எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் உயிரின் மீது மருத்துவர்கள் அக்கறை செலுத்த வேண்டும். இதுபோன்று சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எந்த மருத்துவமனையில் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget