மேலும் அறிய

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 170 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகர காவல் துறை ஆணையர் காமினி

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை மாத்திரை, போதைய ஊசி, லாட்டரி சீட் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். 

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்களின் அறிவுரைப்படி திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் .

இந்நிலையில் அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வயலூர் ரோடு சண்முகா நகர் சந்திப்பு அருகில் வாகன தணிக்கையில் செய்தபோது சந்தேகம்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தராம் வயது 38, த.பெ.நடராஜன் என்பவரால் கொண்டு வரப்பட்ட 3 மூட்டைகளை சோதனை செய்ய அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை கைபற்றியும், பின்னர் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து, அவர் வீட்டில் சோதனை செய்து அங்கிருந்த ஹான்ஸ் - 85 கிலோ, விமல்-47 கிலோ, கூல்லிப் -25 கிலோ, வி ஒன் டொபாக்கோ- 10 கிலோ மற்றும் RMD பான்மசாலா-3 கிலோ என மொத்தம்1,85,000/- மதிப்புள்ள, 37 மூட்டைகளில் இருந்த 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய TN 48 BJ 6496- TVS XL என்ற இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், ஒரு நபரை  கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் போதை பொருட்கள் குறித்து தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வது பொதுமக்களுக்குத் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget