மேலும் அறிய

நெல்லை: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்..? - கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பெருமாள் என்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில் அவர் ஊரார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பால் கட்டளை வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி நாராயணன். இவர் தனது குடும்பத்தினரை கடந்த ஆறு மாதமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நான் எங்கள் பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தை பயிர் வைப்பதற்காக குத்தகைக்கு வாங்கினேன். அந்த நிலத்தை ஊருக்கு தரும்படி ஊர் நிர்வாகிகள் கேட்டனர். அதை கொடுக்க மறுத்த காரணத்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் நாட்டாமை இளையராஜா உத்தரவிட்டார். இது தொடர்பாக  முதலில் புகார் அளித்தோம். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாததால் நாட்டாமை சொல்படி எங்களை ஒதுக்கி வைக்கவில்லை என ஊரே பொய் சொல்லி விட்டனர். அதன் பின்னர் எனது வயிலில் வேலைக்கு ஆட்கள் வரக்கூடாது என கூறி வேலைக்கு வந்த 2 பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதன் பின் எனது குழந்தைகளிடம் பேசிய  எனது உறவினர்கள் 3 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். இது போல பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்ததோடு ஊரில் சேர வேண்டும் என்றால் ஒதுக்கி வைத்த 5 பேரும் ஒரு லட்சமும், நான் அந்த நிலத்தையும் கொடுக்க வேண்டும் என்றும் அதோடு ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர். 

நெல்லை: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்..? - கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வராததால் 6 ஏக்கர் விவசாயம் இல்லாமல் தீய்ந்து விட்டது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பேரை நாட்டாமையாக தேர்ந்தெடுப்பார்கள். நாட்டாமை சொல்வது தான் எங்கள் ஊரில் தீர்ப்பு. அவரது தீர்ப்புக்கு ஊரே கட்டுப்பட வேண்டும். ஜனவரி மாதம் பெருமாள் என்பவர் என்னிடம் வேலைக்கு வந்ததால் என்னால் ஒதுக்கி வைக்கப்பட்டார். மீண்டும் ஊரோடு சேர வேண்டுமென்றால் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றனர். அதன்படி அவர் காலில் விழுந்தார். நான் ஊரோடு சேர வேண்டுமென்றால் அந்த நிலத்தை எழுதி வைக்க வேண்டும் என்கிறார்கள். காவல்துறை நீதிமன்றம் போன்றவற்றிற்கு ஊர் நாட்டாமை கட்டுப்படமாட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீசார் பேசியும் ஊர் நாட்டாமை கேட்கவில்லை” என தெரிவித்தார்.

நெல்லை: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்..? - கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

இதுகுறித்து நாராயணனின் மனைவி மணிமேகலை கூறும் பொழுது, “நாங்கள் வாங்கிய நிலத்தை எழுதி தரும்படி கேட்டார்கள். நிலத்தை கொடுக்காததால் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர்.  எங்கள் குழந்தைகளிடம் கூட யாரையும் பேச விடுவதில்லை. எனது குழந்தையிடம் பேசிய மற்றொரு குழந்தையை பார்த்து அவரது தந்தை அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவனிடம் பேசாதே என்று கூறியிருக்கிறார். இதை எனது மகன் என்னிடம் கூறும் போது கவலையாக இருக்கிறது. இந்த நவீன காலத்திலும் இது போன்று ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், “காவல்துறையிடம் புகார் அளித்தோம், அவர்கள் ஊர்காரர்களிடம் கூறியும் எந்த பயனும் இல்லை. இவர்கள் செய்யும் கொடுமையால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். பொருளாதாரம் எவ்வளவோ வளர்ந்த பின்னும் இன்னும் இதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். காவல்துறை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்பதால் ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ”பிரச்சனைக்குரிய அந்த இடத்தை முதலில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஊருக்காக வாங்க முடிவு செய்தனர். ஆனால் நாராயணன் முதல் ஆளாக முந்திக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிலத்தை வாங்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் நிர்வாகிகள் நாராயணனை எந்த நிகழ்விலும் சேர்த்துக் கொள்ளவில்லை. மற்றபடி கடையில் அவருக்கு பொருட்கள் வாங்கவோ தண்ணீர் பிடிக்கவோ ஊர் தலைவர்கள் தடை விதிக்கவில்லை. இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர். இதற்கிடையில் நாராயணனிடம் வேலைக்கு சென்ற பெருமாள் என்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், அவர் ஊரார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. நாடு வளர்ச்சியடைந்து வரும் இன்றைய கால கட்டத்திலும் ஊர் நாட்டாமை தீர்ப்புக்கு மக்கள் கட்டுப்படும் பழக்க வழக்கம் நெல்லையில் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Breaking News LIVE: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
Embed widget