மேலும் அறிய

South TN Rains: தென் மாவட்ட மக்கள் மிகவும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் - ஆளுநர் ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும் அதனால் ஏற்பட்டுள்ள மழையாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும் அதனால் ஏற்பட்டுள்ள மழையாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு அரசும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் மீட்பு பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் ரவி கூறியுள்ளதாவது,  “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களையும், இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள். அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில அமைப்புகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் 4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கடற்படை, கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆளுநர் ரவி அவசர அலோசனை நடத்தினர். 

அமைச்சர் உதயநிதி பேட்டி 

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நெல்லை வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர் உதயநிதி உதவிகளை வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில்,
நெல்லையில் மிக கனமழை பெய்த காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3500 பேர் நேற்று காலை முதல் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளோம் சில இடங்களில் மழை அதிகமாக பெய்தது சிலர் வீடுகளிலே இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு படகு வசதி ஏற்பாடு செய்துள்ளோம். 

என்னையும் சக அமைச்சர்களையும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் இங்கு அனுப்பியுள்ளார். நாங்கள் மீட்பு பணியில் தயார் நிலையில் இருக்கிறோம். நேற்றை விட இன்று மழை குறைந்துள்ளது. தண்ணீரும் வடிய தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை சந்திப்பு, சிந்துப்பூந்துறை பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அளவுக்கு அதிகமாக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 36 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் மழை வெள்ளத்தால் நெல்லையில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைந்திருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முடிந்தவரை வெளியே வரவேண்டும். நெல்லையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. அடுத்த கட்டமாக கான்கிரீட் போடும் பணிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. கால்வாயில் தற்போது பிரச்சனை இல்லை. முதல்வர் நாளை டெல்லிக்கு சென்று பிரதமரிடம் நிவாரணம் கேட்க உள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரணத்தையும் முதல்வர் அறிவிப்பார்.  பொதுமக்களுக்கு பால் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து அறிவுறுத்தியுளளோம். பத்தாயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Embed widget