மேலும் அறிய
Advertisement
‘அடக்கம் செய்ய யாரும் இல்லை’; தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி கேட்பாரற்று இறந்த சோகம்..!
உடன் பணி புரிபவர்கள், ‘நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்காங்க’ என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில், இறந்தால் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால், தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த மூதாட்டி கேட்பாரற்று இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோஸி. 66 வயதான இவருக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னாட்களில் ஊராட்சி சார்பில் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட விடுமுறை போடாமல் வேலை செய்து வந்துள்ளார். இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை கெளரவித்து உள்ளார். அப்படி வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள், ‘நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்காங்க’ என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோஸி தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த 50000 ரூபாய் பணத்தில் தனக்கென்று ஒரு கல்லறையை கட்டி வைத்திருந்தார். அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ரோஸிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கவனிக்க யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார். இந்த நிலையில் ஒரு வாரமாக வீட்டின் வெளியே ரோஸியை காணாமல் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த போலீசார் ரோஸியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும். கேலி கிண்டல்களால் மனம் நொந்து தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion