மேலும் அறிய
Advertisement
தங்க நகை முன்னறிவிப்பின்றி ஏலம்; ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
புகார்தாரர் கோரிய பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதாகும் என்று கருதுவதால் வட்டியை பெற்றுகொண்டு நகையை திருப்பிக் கொடுப்பதுடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர் அடகு வைத்த தங்க நகையை முன்னறிவிப்பின்றி ஏலம் விட்ட ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேப்பஞ்சேரி ஜீவா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கடந்த 14.12.2020 அன்று தனது நான்கரை சவரன் தங்க நகையை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் அடமானம் வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 03.09.2021 அன்று தான் அடமானம் வைத்த நகைக்கான வட்டியாக 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கிளையில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து கடந்த 29.09.2021 அன்று விவசாயத்தின் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வங்கி கிளைக்கு சென்று அடகு வைத்த நகையை மீட்பதற்காக கேட்டபோது அங்கு பணியில் இருந்த மேலாளர் மரியதாஸ் என்பவர் அசல் வட்டி இரண்டையும் கட்ட வேண்டும் என்றும் ஆனால் நகையை ஏலம் விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ராஜ் மனவேதனை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 21.02.2023 அன்று தான் அடகு வைத்த நகை 916 தரமுடையது என்றும் அதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரும் என்றும் நகை ஏலம் வருவதற்கு ஏழு நாட்களுக்கு அறிவிப்பு அனுப்பாமல் உள்ளதாக கூறி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியதன் அடிப்படையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு வங்கி கிளை முறையான எந்த முன்னறிவிப்பும் அனுப்பாமல் ஏமாற்றும் நோக்கம் கொண்டு சட்டரீதியான நடைமுறையை கடைப்பிடிக்காமல் நகையை ஏலம் விட்டுள்ளனர். புகார்தாரர் செலுத்திய 6000 ரூபாய் வட்டித் தொகையை வரவு வைக்கவில்லை.வங்கி கிளை தவறான வணிக நோக்கில் புகார்தாரரின் நகையை விற்றுள்ளனர். வங்கி கிளை உரிய ஆவணம் தாக்கல் செய்யாதிருப்பதிலிருந்து முறையான சட்ட நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிய வருகிறது. எனவே புகார்தாரர் கோரிய பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதாகும் என்று கருதுவதால் வட்டியை பெற்றுக் கொண்டு நகையை திருப்பிக் கொடுப்பதுடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 9% வட்டியுடன் வழங்கவும்,ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்கவும் ஆணையம் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion