மேலும் அறிய

Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரும் டிராகன் விண்கலம், அங்கிருந்து கிளம்பிவிட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் உறுதிப்படுத்தியது. சுனிதா எத்தனை மணிக்கு பூமிக்கு வருகிறார் தெரியுமா.?

சர்வதேச விண்வெளி மையத்திற்கு, 9 நாட்கள் பயணமாக சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியாமல், 9 மாதங்களாக அங்கேயே சிக்கித் தவித்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், அவர்கள் பூமி திரும்பும் பயணம் தொடங்கியுள்ளது.

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்

விண்வெளி ஆராய்ச்சிக்காக, பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்து, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. ஆராய்ச்சியில் ஈடுபட, பல குழுக்கள் அங்கு சென்று திரும்புவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் மாதம், 9-வது குழுவாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

9 நாட்களில் பூமி திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். பின்னர், அவர்கள் பூமிக்கு திரும்ப அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்

இப்படிப்பட்ட சூழலில், இரு விண்வெளி வீரர்களையும் மீட்டு பூமிக்கு அழைத்து வரும் பணியில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களமிறங்கியது. அதன்படி, பால்கன் 9 ராக்கெட்டில், 10-வது குழு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சனிக்கிழமை இரவு ஏவப்பட்டது. தனது வெற்றிகரமான பயணத்திற்குப்பின், ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச விண்வெளி மையத்துடன், டிராகன் காப்ஸ்யூல் டாக்கிங் செய்யப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் சென்ற புதிய விண்வெளி வீரர்கள், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை சந்திக்கும் உற்சாகமான காட்சி, இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் டாக்கிங் செய்யப்பட்டிருந்த டிராகன் விண்கலம், அங்கிருந்து அன்டாக்கிங், அதாவது விண்வெளி மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த விண்கலம், 17 மணி நேர பயணத்திற்கப் பிறகு, அமெரிக்க நேரப்படி செவ்வாய் மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நேரப்படி, புதன் கிழமை அதிகாலை சுமார் 3.30 மணி.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அன்டாக்கிங் செய்யப்பட்ட டிராகன் கேப்ஸ்யூல், சுற்றுவட்டப் பாதையை அடைந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.

இதன் மூலம், 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமியின் காற்றை சுவாசிக்க உள்ளனர். அவர்கள் பூமி திரும்பும் நிகழ்வை, நாசா நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. இதைக் காண உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Embed widget