Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி ஒரு சரிவில் கவிழ்ந்தது .

கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை மிக முக்கியமான சாலையான பந்திப்பூர்-குண்டலுபேட்-கூடலூர் சாலை உள்ளது, இந்த சாலையானது பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
மேலும் அதிக வளைவில் கொண்ட இந்த அவ்வப்போது விபத்துகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன.
லாரி விபத்து:
கூடலூரில் இருந்து பெங்களூருக்கு இரும்புப் பொருட்களை ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி ஒரு சரிவில் கவிழ்ந்தது . பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் லாரி பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது, ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி கவிழமால் அப்படியே நின்றது.
View this post on Instagram
நெஞ்சை பதைப்பதைக்க வைக்கும் இந்த வீடியோவை பின்னால் வந்த மற்றொரு லாரி ஓட்டுநர் இந்த விபத்தை மொபைல் போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் குண்டலுபேட்டை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
#JustNow#Neelgiri: #Kakkanalla - #Pandipur national highway loses control and accident. Fortunately no one was affected#Lorry accident near #kakkanala #நீலகிரி Bandipur National Highway
— Nilgiri News , Ooty News (@ootynews) March 17, 2025
Nilgiri news Ooty news Gudalur news pic.twitter.com/DaUqFJrpbH
இந்த விபத்தானதி குண்டலுபேட்டை காவல் நிலைய எல்லைக்குள் நடந்தது, போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

