மேலும் அறிய

NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?

'என்னவிருந்தாலும் விஜயை தன்னுடைய தம்பியாக வரித்துக்கொண்டுவிட்ட சீமான், விரைவில் மனமிறங்கி விஜயிடன் கரம்கோர்த்தாலும் ஆச்சரியமில்லை'

நாம் தமிழர் கட்சியை, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வைக்கும் முயற்சியில் விஜய் தற்போது இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தரப்பில் இருந்து சீமான் தரப்பிடம் சில முக்கியமான நபர்கள் பேசியதாகவும், ஆனால், சமீபகால தமிழக வெற்றிக் கழகத்தினர் செயல்பாட்டில் அதிருப்தியில் உள்ள சீமான், தற்போது அந்த பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டாம இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என் தம்பி விஜய் – அண்ணன் சீமான்

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேச்சு எழுத் தொடங்கியதில் இருந்தே அவருக்கு சப்போர்ட் செய்தவர் சீமான். யார், யாரோ தமிழ்நாட்டில் கட்சி தொடங்கும்போது, மண்ணின் மைந்தனான என் தம்பி கட்சித் தொடங்கினால் நான் வரவேற்பேன் என்பதையே அவரது நிலைபாடாக பல நாட்களாக வைத்திருந்தார். ஆனால், விஜய் கட்சித் தொடங்கிய பின்னர், அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமும் விஜய்தான். தனக்காக பேசிய, தனக்காக ஆதரவு கரம் நீட்டிய சீமானை அவர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அந்த கோபம் சீமானை விஜயை சீண்டி பேசும் அளவிற்கு கொண்டுச் சென்றது. பதிலடியாக தமிழக வெற்றிக் கழகத்தினர் சமூக வலைதளங்களில் சீமானை விமர்சிக்கத் தொடங்கி, அதற்கும் பதிலுக்கு பதில் நாம் தமிழர் கட்சியின் ஐ.டி. விங் அணியினர் பேச, சமூக வலைதளமே NTK Vs TVK என்ற அளவில் ஒரு கட்டத்தில் பற்றி எரியத் தொடங்கியது.

சீமான் வீட்டில் அத்துமீறிய காவல்துறை – கரம் நீட்டிய TVK

இந்நிலையில், சீமானின் சென்னை வீட்டில் காவல்துறை அத்துமீறி நடந்துக்கொண்ட சம்பவத்தை கண்டித்து விஜயின் TVK கட்சியினர் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். சீமான் கட்சிக்கும் எங்களுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தால், அவர் வீட்டில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக காவல்துறையை வைத்து துஷ்பிரயோகம் செய்வதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொதிக்கத் தொடங்கினர்.

பாஜக பக்கம் சாயும் அதிமுக ? சீமான் பக்கம் சாயத் தொடங்கிய விஜய்

இதுபுறம் இருக்க, அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமையும் என்றும் இரண்டு பேரும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தி, ஆட்சியை பிடிப்பது உறுதி என்ற பேச்சுகள் கச்சைக் கட்டி பறந்து வந்தன. கிட்டத்தட்ட அதை உறுதிச் செய்யும் வகையில், அதிமுகவினர் யாரும் விஜயை விமர்சித்து பேசியதில்லை, அதே மாதிரி த.வெ.கவினர் யாரும் அதிமுகவினரை மறந்தும் கூட விமர்சிப்பது இல்லை. இப்படியான சூழல் நிலவி வந்த நிலையில், பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைக்குமா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட கேள்விக்கு வைக்க மாட்டோம் என்று அவர் பதிலளிக்காமல், இந்த கேள்வியையெல்லாம் 6 மாதம் கழித்து கேளுங்கள் என்று பதிலளித்தார். அதோடு, பாஜகவோடு கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடப்பதாக அண்ணாமலை சொல்லாத ஒரு கருத்தை செய்தியாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டப்போது, அவர் அப்படி சொல்லவே இல்லை. அவர் என்ன சொன்னார் என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு கேளுங்கள் என்று திருப்பி அடித்தார்.

பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து பேசிக்கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் தெரியத் தொடங்கியது. அதோடு, எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமணவிழாவிற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் படையே சென்று கலந்துகொண்டது உள்ளிட்ட நிகழ்வுகள் எல்லாம் விஜயை அப்செட் ஆக்கியதாக கூறப்படுகிறது.

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்று அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவின் புதிய பாஜக பாசம் விஜய்க்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

”என் தம்பியை நான் அடிப்பேன் யாரும் கேட்கக் கூடாது, யாராவது அடிச்சா நான் கேட்பேண்டா”

இந்நிலையில், தொடக்கம் முதலே தனக்கு ஆதரவாக இருந்தவரும் அண்ணனுமாகிய சீமானை தன்னுடன் கூட்டணிக்கு கொண்டுவந்து தேர்தலை சந்திக்க விஜய் தயார் ஆகிவிட்டதாகவும், அதற்கான காய்நகர்த்தல்களை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, சீமானுக்கு விஜய் தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் இருந்து சிலரை தூதாக அனுப்பியுள்ளதாகவும், ஆனால், விஜயின் கடந்த கால செயல்பாடுகளால் கசந்துப் போயிருகும் சீமான், இப்போது அதை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லியதாகவும் தெரிகிறது.

ஆனால், என்னவிருந்தாலும் விஜயை தன்னுடைய தம்பியாக வரித்துக்கொண்டுவிட்ட சீமான், விரைவில் மனமிறங்கி விஜயிடன் கரம்கோர்த்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது அரசியல் வட்டாரம்.

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget