மேலும் அறிய

குழந்தைகளுக்கு தலசீமியா கண்டறிதல்: தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடந்த முகாம்

தலசீமியா என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இதற்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் சார்பில் குழந்தைகளுக்கு தலசீமியா கண்டறியும் முகாம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வகித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தலசீமியா என்பது ஒரு மரபுவழி நோய் ஆகும். இது இரத்தத்தில் தேவையான ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்க முடியாததால் ஏற்படுகிறது.

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வாக அமைகிறது

தலசீமியவின் முக்கியமான வகைகள் 'ஆல்பா தலசீமியா" மற்றும் பீட்டா தலசீமியா ஆகும். இந்த நோயின் தீவிரத்தை பொறுத்து பிறந்த ஆறுமாத குழந்தைகளில் இருந்து அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கலாம். தலசீமியா நோய் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் இரத்த மாற்றம் தேவைப்படுகிறது. மேலும் தினசரி மருந்துகளும் உட்கொள்ள தேவைப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வாக அமைகிறது. இந்த சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

தலசீமியா நோய் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 குழந்தைகள் தலசீமியா நோய் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த வருடம் 20.07.2023 அன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்  தலைமையில் சென்னை குளோபல் மருத்துவமனை உடன் இணைந்து  தலசீமியா முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டு குழந்தைகளுக்கு வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில்  கீழ் இலவசமாக செய்யப்பட்டு அவர்கள் நலமுடன் உள்ளனர்.

அதே போல் நேற்று தஞ்சை மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகளுக்கான தலசீமியா முகாம் சென்னை குளோபல் மருத்துவமனை உடன் இணைந்து தஞ்சை ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் நடந்தது.

இதன் மூலம் மேலும் சில குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பயன்பெறுவார்கள். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 26 லட்சம் வரை செலவாகும். ஆனால் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கு ஹீமோகுளோபின் உற்பத்தி ஆகாது. குழந்தைகளின் வளர்ச்சி இருக்காது. குழந்தைகள் ஆரோக்கியமாக விளையாட மாட்டார்கள். ரத்த சோவை ஏற்படும். முகம் வீக்கம் கை, கால் வீக்கங்கள் இதற்கான அறிகுறிகள் ஆகும். எனவே குழந்தைகளுக்கு இவ்வாறு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலசீமியா என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தலசீமியா என்பது ஒரு பிறவி மரபணு அசாதாரணமாகும், இது அசாதாரண ஹீமோகுளோபின் மற்றும் குறைக்கப்பட்ட இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையால் வகைப்படுத்தப்படுகிறது. தலசீமியா என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இதற்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது.

ஒரு குழந்தை ஒரு குறைபாடுள்ள ஹீமோகுளோபின் மரபணுவை பெற்றோரிடமிருந்தோ அல்லது இருவரிடமிருந்தோ பெறும்போது, ​​உடல் குறைபாடுள்ள ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. ஹீமோகுளோபின் என்பது இரும்பு-பிணைப்பு புரதமாகும், இது ஆல்பா மற்றும் பீட்டா சங்கிலிகளால் ஆனது. இந்த புரத அமைப்பு ஆக்ஸிஜனை பிணைப்பதிலும் எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதிக்கப்பட்ட மரபணுவின் வகையைப் பொறுத்து, அசாதாரண ஹீமோகுளோபின் அளவு மாறுபடும். அசாதாரண ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருந்தால், தலசீமியாவின் தீவிரம் அதிகமாகும்.

அசாதாரண ஹீமோகுளோபின் இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லத் தவறி, இரத்த சோகை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளில் விளைகிறது. ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் அதிகரிப்புடன் உடல் இந்த மாற்றத்திற்கு பதிலளிக்கிறது. இந்த அதிக உற்பத்தி-உந்துதல் அதிக அறிகுறிகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. தலசீமியாவின் வகையைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை. இரத்த சிவப்பணுக்கள் வழக்கத்தை விட சிறியதாகவும் வெளிறியதாகவும் இருக்கும். பாதிக்கப்பட்ட மரபணுவின் சரியான வகையை கண்டறிய மரபணு சோதனைகள். முடிந்தவரை மற்ற குடும்ப உறுப்பினர்களை பரிசோதிக்க இது உதவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget