மேலும் அறிய

மழையால் நனையுது நெல்... காய வைக்க இடமில்லை: 22 சதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யுங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இலக்கை தாண்டி சாகுபடி செய்திருந்தாலும் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் நெற்பயிர்கள் பாதித்தன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழை மற்றும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு ஆகியவற்றால் அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்ப்செட் வாயிலாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை நடந்து வருகிது. இந்த நெல்மணிகள் தற்போது பரவலாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவால் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையோரத்தில் குறுவை நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே 22 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.5 லட்சம் ஏக்கரில் குறுவை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்து காணப்படும்.

இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில்  சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இலக்கை தாண்டி சாகுபடி செய்திருந்தாலும் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் நெற்பயிர்கள் பாதித்தன. இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அதனை அறுவடைக்கு தயார்படுத்தினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பா, தாளடி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போதுதான் விறுவிறுப்படையும் சம்பா சாகுபடி

ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தாமதம் ஆனதால் ஒரு சில இடங்களில் தற்போதும் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடந்து வருகிறது. பாய் நாற்றங்கால், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பம்ப்செட் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில்  தற்போது 95 சதவீதம் வரை அறுவடை பணிகள் நடந்துள்ளன. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

மழையால் நனைந்த குறுவை நெல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பெய்த மழையால் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. அவற்றை உலர்த்த  கொள்முதல் நிலையங்களில் உலர் களம் இல்லாததால் கிராம புறத்தில் உள்ள சாலைகளில் கொட்டி நெல்மணிகளை விவசாயிகள் காய வைக்கின்றனர். அதே போல் ராராமுத்திரகோட்டை, சாலியமங்கலம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல்களை சாலையில் கொட்டி காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காய வைக்க இடமில்லையே... தவிக்கும் விவசாயிகள்

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  எங்கள் பகுதியில் அறுவடை செய்த நெல்மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாமல் கொள்முதல் நிலையம் அருகே காயவைக்க வந்துள்ளோம். இது தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் நெல்லை காயவைக்க கூடாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அடிக்கடி பெய்து வரும் மழையால் நெல்மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. குறைந்த நேரம் மட்டுமே காயவைக்க  முடிகிறது. பகலில் காயவைத்தாலும் இரவில் பனிப்பொழிவால் மீண்டும் ஈரப்பதம் ஆகிறது.

எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்களம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget