மேலும் அறிய

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்

திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது எனவும் இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார்.

அதிமுக நிர்வாக ரீதியாக 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இபிஎஸ் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் தேர்தல் அறிவுரைகள் குறித்தும் உரையாடி வருகிறார். அதோடு கட்சியினர் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது திருச்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது.    திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். ஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை.” எனத் தெரிவித்தார்.

அதுவரை அமைதியாக பேசிக்கொண்டிருந்த இபிஎஸ் திருச்சி பெயரை கேட்டதும் டென்ஷன் ஆகிவிட்டார்.

”அதிமுகவுக்கு நிர்வாகிகள் உழைக்க வேண்டும். திமுகவினரோடு தொடர்பில் இருப்பதை நிறுத்த வேண்டும். திருச்சி மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற வேண்டும். ஏனென்றால் அங்கு 2011, 2016 தேர்தலில் அவ்வளவு தொகுதிகள் வென்று காட்டியுள்ளோம்.

தற்போது திமுகவினரோடு கைகோர்த்து இருப்பதால் அதிமுக முறையாக செயல்படவில்லை என தெரிகிறது. இதுதான் கடைசி எச்சரிக்கை.

அதிமுகவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. பூத் கமிட்டி வேலை எப்படி போகிறது. எவ்வலவு உறுப்பினர்களை சேர்த்துள்ளீர்கள். இளைஞர்களை அதிகப்படியாக சேர்க்கும் வழியை பாருங்கள். அப்போதுதான் 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய திருச்சி அதிமுக நிர்வாகிகள், நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என உறுதியளித்தனர்.

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget