மேலும் அறிய
Advertisement
நாகப்பட்டினத்தில் கடல் அட்டைகள் பறிமுதல் - பதுக்கி வைத்தவர் தப்பி ஓட்டம்
நாகையில் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: கடல் அட்டையை பதுக்கி வைத்தவர் தப்பி ஓட்டம்.
நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் அட்டைகள் கடத்துவதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் நாகப்பட்டினம் கீரை கொள்ளை தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் 700 கிலோ எடையுள்ள ரூ. 21 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகப்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(52) என்பவருக்கு சொந்தமான குடோன் என்பதை கடலோர காவல் குழும போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்த்தை தேடி வருகின்றனர். கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் வனசரக அலுவலத்தில் கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion