New Hyundai SUVs: அயோனிக் 9 முதல் இன்ஸ்டர் ஈவி வரை! சந்தைக்கு வரப்போகும் புது மாடல் கார் இதுதான்.. ஹுண்டாயின் புதுவரவு!
Upcoming Hyundai SUVs: அயோனிக் 9, இன்ஸ்டர் ஈவி என எஸ்யூவி வடிவத்தில் ஹுண்டாய் நிறுவனம் 7 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பட ஹுண்டாய் நிறுவனமும் புதிய புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எஸ்யூவி கார்களில் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும் ஹுண்டாய் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
1. புதிய ஹுண்டாய் வெனுயூ:
ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கிய கார் மாடல்களில் ஒன்று வெனுயூ. இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் பொருத்தி, புதிய வடிவத்தில் புதிய ஹுண்டாய் வெனுயூவை அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டில் ஏதேனும் விழாக்காலத்தில் இந்த புதிய கார் அறிமுகப்படு்தத வாய்ப்பு உள்ளது.

2. 7 இருக்கைகள் கொண்ட ஹுண்டாய் ப்ரீமியம் எஸ்யூவி:
ஹுண்டாய் தற்போது 3 அடுக்கு வரிசை எஸ்யூவி கார் வடிவமைப்பிற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இது ஹைப்ரிட் மாடலாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஹுண்டாய் நிறுவனத்தின் அல்காசர், டக்சன் கார்களைப் போல இந்த கார் உருவாகி வருகிறது.
3. ஹுண்டாய் பயோன்:
சர்வதேச அளவில் விற்பனையில் அசத்திய பயோனின் அடிப்படையாக கொண்ட இந்த காரை வடிவமைக்க உள்ளனர். ஐ20 காரின் சில அடிப்படை சிறப்பம்சங்களும் இந்த புதிய ஹுண்டாய் பயோன் காரில் இடம்பெற உள்ளது. இந்த புதிய கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சனில் இந்த கார் வடிவமைக்கப்பட உள்ளது.

4. புதிய ஹுண்டாய் கிரெட்டா:
ஹுண்டாய் கிரெட்டா கார் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக உள்ளது. இதை சில மாற்றங்கள் செய்து புதிய ஹுண்டாய் கிரெட்டாவாக இறக்க உள்ளனர். இந்த புதிய வடிவ கார் வரும் 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் ஹைப்ரிட் மாடலாக வடிவமைக்கப்பட உள்ளது.

5. ஹுண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட்:
ஹுண்டாய் டக்சன் ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனையாகி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்து இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர். முகப்பு விளக்குகள், அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட சிலவற்றை மாற்றம் செய்ய உள்ளனர். காரின் கேபினும் புத்தம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட உள்ளது. இதன் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்திய எஸ்யூவி சந்தையில் இந்த கார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஹுண்டாய் இன்ஸ்டர் ஈவி:
ஹுண்டாய் அடுத்தாண்டு தங்களது மின்சார காரான இன்ஸ்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இன்ஸ்டர் காரின் வடிவத்தை முன்னுதாரணமாக வைத்து வடிவமைக்கப்பட உள்ளது. இந்த புதிய இன்ஸ்டர் ஈவி கார் டாடா பஞ்ச் மின்சார காருக்கு போட்டியாக அமையும் என்று ஹுண்டாய் கருதுகிறது.
7. ஹுண்டாய் அயோனிக் 9:
முழுக்க முழுக்க மின்சார காராக இந்த கார் உருவாக்கிறது. மின்னனு ஜிஎம்பி ப்ளாட்பார்மில் இந்த கார் கட்டமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்த அயோனிக் 9 கார் வெளிநாட்டிலே உருவாக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும். இந்த காரின் விற்பனைத் தேதி விரைவில் இந்தியாவில் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த புதிய எஸ்யூவி கார்கள் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.





















