மேலும் அறிய
Advertisement
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும் - பிஆர்.பாண்டியன்
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும். ஏப்ரல் 21 சட்டமன்றத்தின் கருப்பு தினமாகும்
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இயற்கைையை அழிக்கும் கருப்பு சட்டமாகும் என்று பிஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நேற்றைய சட்டமன்ற நிகழ்வுகள் கருப்பு தினமாக அமைந்துள்ளது. குறிப்பாக நீண்ட நெடிய உலகலாவிய போராட்டத்தின் மூலம் உலகலாவிய அளவில் கொண்டுவரப்பட்டது 8 மணி நேர வேலை,8 மணி நேர ஓய்வு,8 மணி நேர உறக்கம் என்கிற உழைக்கும் வர்க்கத்தின் 8 மணிநேர வேலை உரிமைக்கான சட்டமாகும். அதனை மாற்றியமைக்கக்கூடிய அதிகாரம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இல்லை. இதனை முழுமையும் அறிந்த தமிழக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சுயநலத்தோடு துணை போகிற வகையில் தொழிலாளி உரிமையை பறிக்கும் அடிப்படை நோக்கத்தோடு நேற்றைய தினம் சட்டமன்றத்தில் 8 மணி நேர உரிமைக்கான சட்டத்தை பறித்து 12 மணிநேர வேலை என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இச்சட்டம் கொண்டு வருவதின் மூலம் தமிழக அரசின் உண்மை முகம் தெளிவாகிறது. உலக வரைபடத்தில் தமிழகம் கரும் புள்ளியை பெற்றுள்ளது. இந்நிலை தொடர்வதை இனி அனுமதிக்க கூடாது. நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 விமான நிலையங்கள் கட்டுவதற்கும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்கிற அடிப்படையில் கொண்டு வரப்பட்டிருக்கிற தமிழக அரசின் சட்ட திருத்தம் தமிழ்நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்கான மறைமுகமாக இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து வளர்ச்சி என்கிற பெயரால் விமான நிலையங்கள் அமைப்பதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுமான திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இந்த சட்டம் வழி வகுக்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் அழிந்து போகும் பேராபத்து ஏற்படும்.வெள்ள காலங்களில் பேரழிவு ஏற்படுத்தும் பேரபாயத்திற்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் நடவடிக்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்து துணை போகும் சுயநல ஆட்சியாக மாறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக ஆட்சி தமிழக மக்கள் நலனுக்கு எதிராக மாறி வருகிறது. இச்சட்டம் தமிழக நலனுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டிருக்குமேயானால் முதலமைச்சர் தலைமையிலான பருவநிலை மாற்றம் மற்றும் பேரழிவிலிருந்து இயற்கை வளங்கள் பாதுகாப்பிற்கான உயர்மட்ட குழுவின் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதா? குழுவினுடைய அனுமதி பெறப்பட்டுள்ளதா? குழு போட்டு இயற்கையை பாதுகாப்பேன் என்று சொல்லிவிட்டு, சட்டம் போட்டு இயற்கையை அழிப்பதற்கு முற்படுவது நியாயமா? இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க முன் வர வேண்டும்.
இச்சட்டம் மூலம் தமிழக அரசு விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் தன் விருப்பத்திற்கு விவசாயிகளிடம் கைப்பற்றுவதற்கும், கார்ப்பரேட்டுகள் அபகரிப்பதற்கு சட்டம் போட்டு விவசாயிகளை ஒடுக்கு வதற்கும் வழி காட்டக்கூடிய கருப்பு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஹிட்லர் ஆட்சியை கேள்வி பட்டுள்ளோம். எங்கள் தலைமுறை அதனை அனுபவிக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அதைவிட கொடுமையான கொடுங்கோல் சட்டங்கள் நேற்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதின் மூலம் சட்டமன்ற கருப்பு தினமாக அமைந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். மறுக்கும்பட்சத்தில் தமிழகத்தில் மறு சுதந்திரப் போராட்டத்தை விவசாயிகள், ஊழைக்கும் மக்கள் ஒன்றினைந்து தீவிரமான போராட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தொழில்நுட்பம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion