Avaniyapuram Jallikattu 2025 LIVE: சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நேரலை!
Avaniyapuram Jallikattu 2025 LIVE Video:தமிழர்களின் பண்பாட்டு மற்றும் வீரத்தை பறைச்சாற்றும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் அன்று நடத்தப்படுகிறது
தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றாலே கரும்பு, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் சேர்த்து நம் நினைவுக்கு அடுத்ததாக வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை:
தை முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கமாகும். அதன்படி. இன்று அவனியா புறத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2 ஆயிரத்து 26 காளைகள், 1735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் விழாக்கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வருபவர்கள், காளைகளுக்கு மது ஊற்றியிருந்தால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. மேலும், மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகே போட்டியுல் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். களத்தில் காயம் அடையும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் மருத்துவக்குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.