Ajith Kumar : "விடாமுயற்சிக்கும் உந்து சக்தி" உங்கள் அன்புக்கு நன்றி! அஜித் வெளியிட்ட பொங்கல் பரிசு
Ajith Kumar : 24 மணி நேர பந்தயமாக நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணியான அஜித் குமார் ரேசிங் அணி தங்களது முதல் முயற்சியிலே 3வது இடத்தைப் பிடித்து அசத்தியது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் சமீபத்தில் நடந்த கார் பந்தயத்தில் அவரது அணி வெற்றி பெற்றது.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்:
24 மணி நேர பந்தயமாக நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணியான அஜித் குமார் ரேசிங் அணி தங்களது முதல் முயற்சியிலே 3வது இடத்தைப் பிடித்து அசத்தியது. வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Thalapathy 69 Movie: விஜய் 5 முறை பார்த்து ரசித்த பாலைய்யா படத்தின் ரீமேக்கா தளபதி 69? விடிவி கணேஷ் ஓபன் டாக்!
அஜித் குமார் நன்றி:
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அஜித் குமார் நன்றி தெரித்துள்ளார். இதை அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ளார். அதில்,
அன்பான அனைவருக்கும் வணக்கம்!
துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர் திரைத்துறையினர். ஊடகங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
Thank u note from AK pic.twitter.com/8hFC8okz78
— Suresh Chandra (@SureshChandraa) January 14, 2025
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
இதையும் படிங்க: Ajithkumar: "விஜய் வாழ்க.. அஜித் வாழ்க! நீங்க எப்போ வாழப்போறீங்க?" ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்






















