மேலும் அறிய
Advertisement
குறுவை சாகுபடிக்காக இதுவரை வெளியாகாத காப்பீடு அறிவிப்பு - அச்சத்தில் டெல்டா விவசாயிகள்
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் பயிர்க்காப்பீடு அறிவிப்பு வெளியாகி ஜூலை 31ஆம் தேதி வரை பிரீமியம் செலுத்த அவகாசம் அளிக்கப்படும். ஆனால் இதுவரை பயிர்க்காப்பீடுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீடு குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை தமிழக அரசால் வெளியிடப்படாத காரணத்தினால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அரசு உறுதி செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முப்போகம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டும் நடப்பாண்டிலும் மட்டுமே ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குறுவை தொகுப்பு சாகுபடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்மூலம் மானிய விலையில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது . திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இலக்கை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தற்போது வரை 88 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று உள்ளது. குறுவை சாகுபடி பணிகள் ஏறத்தாழ 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடுகான அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் பயிர்க்காப்பீடு அறிவிப்பு வெளியாகி ஜூலை 31ஆம் தேதி வரை காப்பீடு பிரீமியம் செலுத்த அவகாசம் அளிக்கப்படும். ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையிலும் பயிர்க்காப்பீடுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மத்திய அரசின் பயிர் காப்பீட்டை ஏற்று செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டது.
4 காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை ஒரு நிறுவனம் மட்டும் பிரீமியம் தொகையை ஏக்கருக்கு 13,750 லிருந்து 20,000 ஆக உயர்த்தி வழங்க கோரியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு உடன்படாததால் மீண்டும் ஒப்பந்தம் கோர உள்ளது என கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை மத்திய மாநில அரசுகள் உரிய வகையில் செலுத்தாதது, தற்போது பயிர்க்காப்பீட்டு ஏற்க காப்பீட்டு நிறுவனங்கள் தயக்கம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு பயிர் காப்பீடு மட்டும்தான் என்ற நிலையில், நிகழும் ஆண்டு அந்த குறைந்தபட்ச பாதுகாப்பும் இதுவரை உறுதி செய்யப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் முழுவதுமாக பயிர்கள் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அதேநேரத்தில் வருவாய்துறை குறுவை சாகுபடிக்கு கணக்கு பணிகளை இதுவரை தொடங்கவில்லை, இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பொழுது இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே நிவாரணம் மற்றும் இழப்பீடு அறிவிக்கப்படும். அந்த கணக்கெடுப்பு கூட இதுவரை நடைபெறாத நிலையில் குறுவை சாகுபடிக்கான பாதுகாப்பை அரசு கைவிட்டு விட்டதாக கருத வேண்டி உள்ளது என்கின்றனர் திருவாரூர் மாவட்ட விவசாயிகள். எனவே தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் என்ன ஓட்டமாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion