1000 கிலோ அரிசி, 760 கிலோ காய்கறிகளால் தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா
தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசி, , 750 கிலோ காய்கறிகள், 150 கிலோ பழங்களை கொண்டு அன்னாபிஷேக நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐப்பசி மாத பெüர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசி, , 750 கிலோ காய்கறிகள், 150 கிலோ பழங்களை கொண்டு அன்னாபிஷேக நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெüர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இறைவன் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம். ஆச்சார்ய பெருமக்களும் போற்றுகிறார்கள்.
“அம்பிகை பாகனான சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியவை. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
“அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும். அன்னம் எப்படியோ எண்ணமும் அப்படியே என்று சொல்லி வைத்தார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசியும், 750 கிலோ காய்கறிகளும், 150 கிலோ பழங்களும் அளித்தனர். பின்னர் இந்த அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட அன்னத்தை கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பெருவுடையாருக்கு அன்னம் சாத்தப்பட்டு, வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, செüசெü, பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிபழம், வாழைப்பழம், தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பின்னர் அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது அன்னாபிஷேக விழா வழக்கமாக மாலையில் நடைபெறும். ஆனால், சனிக்கிழமை இரவு சந்திரகிரகணம் நிகழ்ந்ததால், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னாபிஷேகம், அலங்காரம், பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, சந்திரகிரகணத்தையொட்டி இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.