மேலும் அறிய

மதுரையை அதிரவைத்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் - சிக்கியது எப்படி?

குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

நாகமலை கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தொல்லை கொடுத்த குரங்கு குல்லா - டவுசர் கொள்ளையர்கள்

 
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் நகர் விரிவாக்கம் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், இங்கு மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது. காலி வீட்டுமனை நிலம் மற்றும் கட்டுமானம் நடக்கும் கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எல்லைக்கு உட்பட்ட ராம்கோ நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்க முயற்சித்த சிசிடிவி காட்சி அப்போது, வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகமலை கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் போட்ட - குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

2 ஆண்டுகளாக தொல்லை

 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த  இரண்டு வருடங்களாக இரவு நேரங்களில் டவுசர் அணிந்தும் குரங்கு குல்லா  அணிந்தும் இரண்டு பேர் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் டவுசர் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
 

சி.சி.டி.வி., காட்சிகள்

 
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை மற்றும் சமயநல்லூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
 

கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

 
போலீசார் தொடர்ந்து நடத்திய  விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தமாரியப்பன் மகன் சிவா மற்றும் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget