Top 10 News: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை! ரஜினிக்கு வாழ்த்து சொன்ன விஜய் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
பெரியார் படத்திற்கு மரியாதை
கேரளா வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்,கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ரஜினிக்கு தவெக தலைவர் வாழ்த்து:
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, அதில் “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் நல்லா ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று விஜய் வாழ்த்தி உள்ளார்.
வெள்ள அபாய எச்சரிக்கை:
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் நலமானது 13,000 கனியாக அதிகரிப்பு இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர் கடலூர் மயிலாடுதுறை திண்டுக்கல் தூத்துக்குடி சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி:
சென்னையை எடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியானது வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் 24 அடி உயரமுள்ள சென்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.28 அடியாக உள்ளது.
விமானங்கள் தாமதம்:
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஏழு விமானங்களின் புறப்பாடு மற்றும் ஐந்து விமானங்களின் வருகை தாமதம் ஆகியுள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
தேர்வுகள் ஓத்திவைப்பு :
கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.
சிறப்பு ரயிலகள்:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு
அண்ணாமலை குற்றச்சாட்டு:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொழிலதிபர் அதானியை சந்தித்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
உலக செஸ் சாம்பியன் ஷிப்:
உலகச் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில்குகேஷ்-லிரன் விளையாடிய 16வது சுற்று ஆட்டம் வரை இருவரும் சமநிலையில் உள்ளதால் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் கடைசி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.