Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Womens Day 2025 Wishes in Tamil: உலக மகளிர் தினத்தன்று நமது வாழ்வில் பல்வேறு விதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுக்கு பகிர்வதற்கு ஏற்ற வாழ்த்து செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Womens Day 2025 Wishes: மகளிர் தினத்தன்று பெண்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், வாட்ஸ்-அப் ஸ்டேடஸில் பகிர ஏற்ற வாழ்த்து செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உலக மகளிர் தின கொண்டாட்டம்:
பெண் என்பவள் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் தவிர்க்க முடியாத உறுதுணையாக இருக்கிறாள். தாய், தாரம், மகள், சகோதரி மற்றும் தோழி என பல வடிவங்களில், பெண்கள் நமது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் சமநிலையை பேணுவதற்கும், வீட்டு வேலைகள், பணியிடம், குழந்தைகள் மற்றும் பெற்றோரை நிர்வகிப்பதற்கும் சரியான உதாரணமாக இருந்து நம்மை வியக்கச் செய்கின்றனர். அவர்களது வலிமையும், பொறுமையும் எப்போது பாராட்டுதலுக்கும், கொண்டாட்டத்திற்கும் உரியது. தொழில்மயமாக்கலின் போது அநீதியான நடத்தைக்கு எதிரான நீண்ட தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு சர்வதேச மகளிர் தினம் உருவானது. 1975 இல் மார்ச் 8ம் தேதியை ஐ.நா. அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது. இந்த குறிப்பிடத்தக்க நாளில் நம்மைச் சுற்றியுள்ள பெண்களைக் கொண்டாடவும் ஊக்குவிக்கவும், அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும் இந்த சர்வதேச மகளிர் தினத்தைப் பயன்படுத்துவோம்.
மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்:
- மகளிர் தின நல்வாழ்த்துகள்! நீங்கள் தொடர்ந்து பிரகாசித்து உலகிற்கு ஊக்கமளியுங்கள்.
- இந்த மகளிர் தினத்தில் உங்களுக்கு வலிமை, வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சி கிட்ட வாழ்த்துகிறேன்!
- எங்களுக்கு எல்லாம் ஒரு உத்வேகமாக இருந்ததற்கும், இருப்பதற்கும், இருக்கப்போவதற்கும் நன்றி. மகளிர் தின வாழ்த்துகள்!
- உங்கள் கருணையும் தைரியமும் எனக்கு ஒவ்வொரு நாளும் உத்வேகம் அளிக்கின்றன. மகளிர் தின வாழ்த்துகள்!
- வலிமையான பெண்கள் ஒருவரையொருவர் உயர்த்துகிறார்கள் - எப்போதும் என்னை உயர்த்துவதற்கு நன்றி!
- வாழ்க்கையை பிரகாசமாக்கும் ஒரு அற்புதமான தோழிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
- உங்கள் பலம் ஒப்பிடமுடியாதது, உங்கள் கருணை முடிவற்றது - தொடர்ந்து அற்புதமாக இருங்கள்
- உங்கள் கனவுகளைத் துரத்துவதற்கான வலிமையையும், உங்கள் இதயத்தை நிரப்புவதற்கான அன்பையும் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்
- நீங்கள் எப்போதும் அன்பு, சிரிப்பு மற்றும் நீங்கள் பெற வேண்டிய வெற்றியால் சூழப்பட்டு இருக்க மகளிர் தின வாழ்த்துகள்
- ஒரு பெண் தலை நிமிர்வது, அந்த தலைமுறையின் தேவை! வால் நட்சத்திரத்தை போல உயர்ந்து பறக்க இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
- பெண்களை பாதுகாக்கவோ, பாடம் கற்பிக்கவோ, வழி காட்டவோ, வலிமை சேர்க்கவோ ஒரு ஆண் தேவை படுவதை விட, வழியை விட்டு விலகி நிற்கவே அதிகம் தேவை! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
- விலையுயர்ந்த பரிசுகளை விட, மரியாதைமிக்க வாழ்த்து அழகானது! இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!
- சுயமரியாதையும், சுயமுடிவுமே பெண்ணின் அழகு! இடையூறு இழைக்காமல் இருப்போம்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண் வளர்ச்சிக்கான ”வாக்கியங்கள்”
- "எந்தவொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு தைரியம்." - எலிசபெத் கேடி ஸ்டாண்டன்
- "ஒரு பெண் ஒரு தேநீர் பை போன்றவள்; நீங்கள் அவளை சூடான நீரில் போடும் வரை அவள் எவ்வளவு வலிமையானவள் என்று உங்களுக்குத் தெரியாது." - எலினோர் ரூஸ்வெல்ட்
- "பெண்களாகிய நாம் சாதிக்கக்கூடியதற்கு வரம்பு இல்லை." - மிஷல் ஒபாமா
- "ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான விஷயம் தன்னம்பிக்கை." - பியோனஸ்
- "பெண்கள் சமூகத்தின் உண்மையான கட்டிடக் கலைஞர்கள்." - ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்
- "நல்ல நடத்தை கொண்ட பெண்கள் அரிதாகவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்." - லாரல் தாட்சர் உல்ரிச்
மகளிர் தின வாழ்த்து - வாட்ஸ்அப் ஸ்டேடஸ்
மகளிர் தின வாழ்த்து புகைப்படம் - 01
மகளிர் தின வாழ்த்து புகைப்படம் - 02
மகளிர் தின வாழ்த்து புகைப்படம் - 03
மகளிர் தின வாழ்த்து புகைப்படம் - 04
மகளிர் தின வாழ்த்து புகைப்படம் - 05

