TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TNPSC Group 1, Group 4 exams 2025 schedule: குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆ-ம் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28-ம் நடைபெறும்.

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சொன்னபடி, ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மார்ச் இறுதியில் கிடைக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, அறிவிக்கையில் குறிப்பிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஆண்டு அட்டவணையில் சொல்லப்பட்டது இதுதான்!
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது என்பதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அக்டோபர் 10ஆம் தேதி அன்று வெளியிட்டது.
இதன்படி, குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிக்கை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி, தேர்வு அறிவிப்புகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘’டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிதாக்கி உள்ளோம். இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் தேர்வர்களுக்கு விடைத் தாளில் சந்தேகமும் குழப்பமோ ஏற்படாது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 40 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படுமா?
தமிழ்நாடு பட்ஜெட்டில் 2025- 2026ஆம் ஆண்டில் 40,000 அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

