மேலும் அறிய

TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!

16 நாட்களில் குறிப்பாக 11 வேலை நாட்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TN Government School Admission : அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி தேதி அன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு,  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டமும் புதுமைப் பெண் திட்டமும் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி இழுத்துவந்தன. 

அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் பல்வேறு விதமான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை

இதற்கிடையே தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கும்.

எனினும் சேர்க்கையை அதிகரிக்கும்பொருட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதற்கு நல்ல பலன் இருந்தது. இந்த நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கி நடைபெற்று வருகிறது.

72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்க்கை

16 நாட்களில் குறிப்பாக 11 வேலை நாட்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கிய பதின்மூன்றே நாட்களில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது. 

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வேகம் சற்று குறைவாகவே உள்ளது. இதற்கிடையே சேர்க்கை வீதத்தை அதிகரிக்கவும் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
TN Budget 2026: ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
CV Shanmugam : சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
சி.வி சண்முகம் மீது FIR.! விஜய் போட்ட ஒரே உத்தரவு- அதிரடியாக நீக்கிய போலீஸ்.? விழுப்புரத்தில் திடீர் டுவிஸ்ட்
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
Embed widget