CSK vs MI Tickets: சென்னை - மும்பை போட்டிக்கு டிக்கெட் வேணுமா? எப்படி வாங்குறது? என்ன விலை?
IPL 2025 CSK vs MI Tickets: ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் சென்னை - மும்பை அணிகள் போட்டிக்கான டிக்கெட் விலை? எப்படி வாங்குவது? என்பதை கீழே காணலாம்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தாெடங்குகிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி அணிகள் மோதும் நிலையில், இரண்டாவது போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்குகிறது? எப்படி வாங்குவது? டிக்கெட் விலை? என்ன என்பதை கீழே காணலாம்.
விற்பனை எப்போது தொடக்கம்?
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 19ம் தேதி ( நாளை மறுநாள்) காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. இந்த டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாக நடக்கிறது.
எப்படி வாங்குவது?
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் chennaisuperkings.com, district.in ஆகிய இரு இணையதளங்கள் மூலமாக வாங்கலாம்.
டிக்கெட் விலை என்ன?
சி/டி/ இ லோயர் - ரூபாய் 1700
ஐ/ஜே/ கே அப்பர் - ரூபாய் 2500
சி/டி/இ அப்பர் - ரூபாய் 3,500
ஐ/ஜே/கே லோயர் - ரூபாய் 4000
கே.எம்.கே. டெர்ரஸ் - ரூபாய் 7 ஆயிரத்து 500
ரசிகர்கள் நேரில் டிக்கெட்டுகளை வாங்க வருவதன் காரணமாக கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் அந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் மூலமாக டிக்கெட் விற்பனை நடத்தப்படுகிறது.
5 முறை சாம்பியன்
ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியன்களான சென்னை - மும்பை ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதாலும் ரோகித் - தோனி இல்லாமல் ருதுராஜ் - பாண்ட்யா கேப்டன்களாக களமிறங்குவதாலும் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அணியில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, கான்வே, அஸ்வின், ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர். மும்பை அணியில் ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா, போல்ட், வில் ஜேக்ஸ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்கள் வாகனங்களை சென்னை பல்கலைக்கழகம், கலைவாணர் அரங்கம் ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் கடைசி சீசனா?
தோனியின் கடைசி சீசனாக இந்த ஐபிஎல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 45 வயதான தோனியை கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்று சென்னை அணியின் ரசிகர்களும், சென்னை அணியும் விரும்புவதாக கூறப்படுகிறது. வழக்கமாக சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. சுழலுக்கு ஒத்துழைக்கும் சென்னை மைதானத்தில் பேட்டிங் பலம் கொண்ட மும்பை அணி கடும் சவால் அளிக்கும் என்றே கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

