சில காலங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டிகளில் 300 ரன்கள் அடிப்பது கடினமான ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், 40 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 350+ ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இன்று நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 356 ரன்கள் எடுத்தது.
350+ ரன்கள் எடுத்த 40 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியைத் தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில், இரண்டாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவும்(33), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும்(28) உள்ளது.