மேலும் அறிய

CM Stalin Discharge: அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி - இன்று வீடு திரும்புகிறார்..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

மருத்துவமனையில் அனுமதியும் - டிஸ்சார்ஜும்:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு என்ன ஆனது என பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், முதலமைச்சர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக (Routine Health Checkup) அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் முடிந்து செவ்வாயன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

என்ன ஆனது முதலமைச்சருக்கு?

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளில் சுற்றுப்பயணம், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி  வைக்கவும், அரசுப் பணிகளை ஆய்வு செய்யவும் பல்வேறுapollo hospital,MK Stalin Health,CM MK STALIN,MK Stalin Hospitalised மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு பயணங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, வயதின் அடிப்படயில் வழக்கமான சில பரிசோதனைகளை செய்வதும் இயல்பு. அதற்காக தான், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சரை சந்தித்த துரைமுருகன்:

இந்த நிலையில் நேற்று இரவு தமிழக நீர்வள அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

துரைமுருகன் சொன்னது என்ன?

அதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,  ”முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்.  ஒரு சில சோதனைகள் அதிகாலை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை மேற்கொண்டு செவ்வாயன்று வீடு திரும்பவார்” என விளக்கமளித்தார்.

மேகதாது அணை விவகாரம்:

iதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் ”மேகதாது நடுவே அணை கட்டுவது தொடர்பாக யாரிடமும் கேட்கத் தேவையில்லை. CAUVERY WATER MANAGAEMENT தான் பொறுப்பு. செவ்வாயன்று டெல்லி சென்று தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக நீர் வேண்டும் எனக் கேட்க உள்ளோம். கூடுதலாக திறக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். மேகதாது விவகாரம் என்று ஒன்று இல்லை பத்திரிகைகள் தான் குழப்பிக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேகதாது என்கிற ஒரு வார்த்தை கிடையாது. மேகதாது என்பது எங்கு கட்டப்படுகிறது என்றால் கே.ஆர். சாகரிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதேபோன்று கபினியில் இருந்து  தண்ணீர் கொட்டுகிறது. அது இரண்டும் கொட்டுகிற இடத்தில் இருந்து தண்ணி புறப்பட்டு வருகிறது. தண்ணிர் கொட்டும் அந்த இடம் தமிழ்நாட்டுக்கு சொந்தம் அங்கு கட்டுவதாக கர்நாடகாவினர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அந்த இடத்தில் அவர்களால் அணை கட்ட முடியாது” என விளக்கமளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Embed widget